102
பெயரால் போற்றி வணங்குகிறோம். இவையனைத்தை ஒரே பாடலில் அமைத்து,
"இரண மீத திடும் றஸ்ஸாகே இகபர நன்மை யாவும்
கரம வளித்திடும் பத்தாஹே கனவறி வுறும் அலீமே
பிரிந்திட உயிரை மேவிப் பிடித்திடும காபி லான
அருமறை பகரும் ஆதி அர்ஹமுர் ராஹி மீனே"
எனப் பாடுவது சிந்தைக்கு விருந்தூட்டுவதாய் அமைந்துள்ளது.
இவ்வாறே, பெருமானார் பேரில் பாடிய முனாஜாத்துகளின் இறுதியில் 'முகம்மது நபியுல்லாவே' என்ற சொற்றொடருடன் பாடல்களை முடிக்கிறார். சான்றாக,
"சொன்மனக் குபிரர் கூடிக் கொடுமிடம்
விளைத்த காலும்
புன்மனத் தினரை யாமும் பொடிபடுத்
திடவுத் தாரம்
சொன்மினென் அமரர் வேண்டும்
தொடர்மொழி மறுத்துப்பேசு
முன்முறை புகழ வந்த
முகம்மது நபியுல்லாவே"
என்ற பாடலில் 'முகம்மது நபியுல்லாவே' என்று முடிப்பதோடு நபிகள் நாயகத்தின் உயர்பெருங் குணச் சிறப்பையும் படம்பிடித்துக் காட்டிவிடுகிறார்.
நபிகள் நாயாம் அவர்கட்கு முஸ்லிமல்லாதவர்களில் பலர் இன்னல் பல ஏற்படுத்தினர். அமரர்களால் கூட சகிக்க முடியாத அத்துன்ப துயரங்களை பெருமானார் மிகுந்த பொறுமையுடன் தாங்கிக் கொண்டார். துன்பமிழைப்போரைத் தண்டிக்கப் பெருமானாரிடம் அனுமதி கேட்டபோதெல்லாம் அதற்கு மறுத்து விட்டவர் பெரு-