பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

111

மெலிவிலா சிபத்துள் மீமாய்
                        வெளிதரு முகியித்தீனே"

எனும் இப்பாடல் அடிதொறும் அரபுச் சொற்கள் பல இடம் பெற்றுள்ளன.

பதினெட்டாவது அரபு எழுத்து 'ஐன்' என்பதாகும். ஒரு பாடலில் இந்த அரபு எழுத்தின் தமிழ் ஒலி பெயர்ப்பு அடியின் முதலில் இடம் பெற்றிருப்பதோடு அஃதே முற்று மடக்காக நான்கு வரிகளிலும் வந்து கருத்து வளமூட்டுகின்றன.

"ஐனது லாத்து ஐனிய பேமாய்
                          ஸாரினுள்ளாய
ஐனது அவ்வ லான அஹ்மது
                           நபியுள் லாவின்
ஐனது ஆரி பான அவிததாம்
                           பொருளை யென்னுன்
ஐனதாற் காட்சி காண அருளும்
                           யாமுகியித்தீனே"

என்பதாகும் அப்பாடல் மேலும் அரபுச் சொற்களை ஒலி பெயர்ப்பாக எழுத நேரும்போது கிரந்த எழுத்துக்களைத் தாரளமாய்க் கையாள்வதையும் காணமுடிகிறது. இயன்ற வரை அரபுச் சொற்களை சிதைவில்லாமல் படிக்கும் போது ஒலிக்க வேண்டும் என்பது ஆசிரியர் கருத்தாயிருக்கலாம்.

இறைவனிடம் குறையிரந்து அருள வேண்டும் பக்திப் பாடல்களான முனாஜாத்து நூல்கள் தமிழில் பதினைந்துக்கு மேல் இயற்றப்பட்டுள்ளன. இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட இம் முனாஜாத்து நூல்கள் எளிய நடையில் அமைந்து. சாதாரண தமிழறிவுள்ள முஸ்லிம்களாலும் தெளிவாகப் புரிந்து கொள்ளும் வகையில் நாள்தோறும் பாடப்பட்டு வருகின்றன.