பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116



திகழ்கிறார். போரின் தொடக்கத்தில் பெருமானார் அவர்கள் அசுகாபிமார்களோடு இருக்கும் காட்சியைக் கூறும் போது

,

""வட்டமதி தன்னை வான்மீன்கள் சூழ்ந்ததுபோல்
இட்டமுள்ள நந்நபியை எல்லவரும் சூழ்ந்துவர'

எனக் கூறுவதன் மூலம் பன்மீன் தடுவண் அப்பன்மீனெனப் பெருமானார் இருந்த காட்சியையும் சூழலை இனிது படம் பிடித்துக் காட்டி விடுகிறார்.

காப்பிய இலக்கண அமைப்போடு தமிழில் முஸ்லிம் புலவர்களால் உருவாக்கப்பட்ட படைப்போர் இலக்கியங்களில் குஞ்சுமூசு லெப்பை ஆலிம் புலவர் இயற்றிய * இரவுசுல்கூல் படைப்போர்', 'செய்யிதத்துப் படைப் போர்' ஆகிய இரு படைப்புகளும் குறிப்பிடத்தக்கவைகளாகும் இவ்விரு நூல்களும் முறையாக நாட்டுப் படலம் நகரப் படலம் முதலியன அமைந்த காப்பியங்களாகும்.

"இரவுசுல்கூல் படைப்போர் 45 படலங்களைக் கொண்டு 2383 விருத்தங்களால் ஆனது. ஒவ்வொரு படலமும் குறைந்த அளவு 10 பாடல்களையும் அதிகபட்சம் 189 செய்யுட்களையும் கொண்டதாகும்

இந்நூல் பாட்டுடைத் தலைவியின் பெயரால் 'சல்கா படைப்போர்" எனவும் அழைக்கப்படுகிறது கடவுள் வாழ்த்துச் செய்யுளில்,

".........கண்ணுறக் காண் கவுற்ற
கன்னி சல்காப் போர்ப்பாட
வெண்ணுதற் கடங்காதான
வேகனே காப்பு நீயே’’