பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

117



எனக் கூறுகிறார். இதன் மூலம் தமிழ்க் காப்பியங்களின் பாட்டுடைத் தலைவிகளான 'மணிமேகலை’குண்டலகேசி’ என அமைந்திருப்பது போன்று இப்படைப்போரின் பெயரும் 'சல்காப் படைப்போர்’ என அழைக்கப்படுகிறதோ என எண்ணத் தோனறலாம்.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் படைத்தளித்த படைப்போர் இலக்கியங்கள் முஸ்லிமல்லாத எதிர்த் தரப்புத் தலைவர்களின் பெயரைக் கொண்டே அமைந் திருக்கிறது, அவ்வழக்கைப் பின்பற்றி குஞ்சுமூசுப் புலவர் இஸ்லாமியர்களை எதிர்த்துப்போரிட்ட இரவுகல்கூல் என்பவனின் பெயராலேயே இரவுசுல்கூல படைப்போர்' எனப் பெயரிட்டிருக்கலாம். கன்னி சல்க தொடக்கத்தில் முஸ்லிமல்லாதவளாக இருந்து பின்னர் பெருமானார் வழி யைப் பின்பற்றி இஸ்லாமானவள். அவள் முஸ்லிமல்லாத சூழலில் காப்பியம் தொடங்குவதால், அவள் பெயரை ஒரு வேளை, இந்நூலுக்கு இட்டிருக்கலாம். காப்பியத்தில் முகப்புப் பக்கத்தில் இந்நூலாசிரியர் குஞ்சமூசுப் புலவர் அவர்கள் 'சல்காப் படைப்போர் என்று வழங்கா நின்ற இரவுசுல்கூல் படைப்போர்' என இரு பெயராலும் அழைக்கிறார். சல்கா முஸ்லிமல்லாதவளாக இருந்தாலும் இஸ்லாத்தில் இணைந்த பின்னர் அவள் பெயரைக் காப்பியத்திற்கு இடுவது படைப்போர் இலக்கியக் கொள்கைக்கு மாறுதலாக இருக்குமோ என்ற ஐயத்தில் மரபு காக்க வேண்டி இஸ்லாத்தின் விரோதியாகப் போரிட்டு மடிந்த இரவுசுல கூல்" என்பானின் பெயராலேயே இந்நூல் அழைக்கப்பட்டிருக்கலாம்.

சாதாரணமாக யார் படையெடுத்துச் செல்கின்றாரோ அல்லது போருக்கு யார் காரணமாக அமைகின்றாரோ அவர் பெயராலேயே இலக்கியப் படைப்பின் பெயர் அமைவதுதான் ம்ரபு. ஆனால், முஸ்லிம் தமிழ்ப் புலவர் கள் இயற்றிய படைப்போர் இலக்கியங்கள் அனைத்துமே