பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/133

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131

யார்அவனைத் தேரோடு சாய்த்துத் தரையில் வீழ்த்து கிறார். வீழ்ந்து பட்ட வடோச்சி இந்நிலையிலும் நல்வழிப் பட்டு தீன நெறி பேணி பிழைக்க வழி காட்டுகிறார். நபிமருகர் அலியாரின் அறிவுரையைச் செவிமடுத்த வடோச்சிக்கு பனிமதியை மணமுடிக்கும் எண்ணமே மிக்கிருந்தது அலியார் வழி நடப்பதாகவும் அதற்கு அவர் தலையைத் தத்துதவ வேண்டுமென கேட்க, அதற்கு அலியாரும் ஒப்புகிறார். வடோச்சி எததனை முறை முயன்றும் அலியார் தலையை ஏதும் செய்ய இயலா நிலையுணர்ந்து மனந் தளர்ந்து அண்ணல் மருகர் காட்டும் அறவழியேதான் உய்யத் தக்கநெறி என உணர்கிறான். இஸ்லாத்தில் வடோச்சியும் அவன் பரிவாரங்களும் இணைகின்றனர். இதனை,

'சூரியனைக் கண்டதுய்ய நல்ல தாமரைபோற்
காரியமென்றே யவினயங்கண்ட வர்களுள் மகிழ்ந்தே
வாரியென வந்த வடோச்சியர்கோனும் படையும்
கோரியாய்த்தானே குணமான நல்மனதாய்
ஈமான் தனை மனதிலெண்ணியலியைப் புகழ்ந்தார்
கோமா நபிக்கீமான் ககாண்டான் வடோச்சியர்
கோன்'

எனக் கூறுகிறார் அசன் அலிப் புலவர்.

எனினும் பனிமதியை மணக்கும் உள்ளுணர்வு அவனுள் பொங்கி நின்றது. அலியார் தலையைக் கொய்து கொடுத்தால் மட்டுமே இந்திராயன் மகிழ்ந்து தன் மகளை மண முடித்துக் கொடுப்பான். இதற்குத் திட்டமிட்ட வடோச்சி அலியார்போல் தோற்றமும் குரலோசையும் உள்ள தாகி என்பவனைப்பற்றி எண்ணுகிறான் தாகி இந்திராயனின் மூத்தமகளை மணந்தவன். தீய குணங்கள் அனைத்தும் குடி கொண்ட துஷ்டன், அவனிடம் தூதுசென்றுஅண்ணலார்வழிபின்பற்றப்பணிப்பது;எதிர்த்தால்அவன் தலையைக் கொய்து. அலியார் தலையெனக் காட்டி,