பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

137

யில் மட்டுமே வாளேந்தல் வேணடும் என்பதையும் இலை மறைகாயாப் படிப்போருக்கு உணர்த்தும் பாங்கில் இந் நூல்அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஐந்து படைப்போர் இலக்கியத்தில் அவலச் சுவை குறிப்பிடத்தக்க இட த்தைப் பறத் தவறவில்லை. போர்க்களத்தே தன் கணவன் இபுனிபன் மாண்டான் என்ற செய்தியைச் செவிமடுத்த அவன் மனைவி துக்க மேலிட் டால் எப்படியெல்லாம துடிக்தாள். துயரம் தாங்காமல் அழற்றினாள் அழுது புலம்பினாள் என்பதை அருமையாகப் படம் பிடித்துக் காட்டி படிப்போர் உள்ளத்திலும் அவலச் சுவை பொங்கச் செய்துவிடுகிறார் அசன் அலிப் புலவர். இறந்து போன இபுனியனின் மனைவி துக்க மேலீட்டால்,

“என்னை விட்டுப் போனிரோ யெப்போதுமைக்
காண்பேன்
மன்னவரே யென்று மாரடித்தாள் மாமயிலாள்"

என ஒப்பாரி வைப்பதாகக் கூறுகிறார்.

இதேபோன்று, போர்க்களத்தே அலியாரின் வாளுக்கு இறையாகிவிட்ட தாகியின் மரணச் செய்தி கேட்டபோது அவன் மனைவி துயரத்தின் உச்சிக்கே சென்று விடுகிறாள் அவள் அடைந்த துயர நிலையை.

'விழுந்தாள் எழுந்தாள் வெற்றி மன்னே என்றழுதாள்
கொழுந்தே எனைப் பிரியக் கூடுமோ என்றழுதாள்
மூடி வைத்த தீ முனையில் மூளுகின்ற வாட்போலும்
ஆட்டிவிட்ட பம்பரப் போல் ஆயிழையாள்
தானழுதாள்'

எனக் கூறுவதன் மூலம் அவள் பெற்ற துயர உணர்வைப் படிப்போரும் பெறுமாறு செய்து விடுகிறார் ஆசிரியர்.