144
அரியபூ பக்கரென்னும் அரிவிடுஞ்
திரலோ ரேகி
அரிநிறத் தோகைபோன்ற அரிவிழித்
துகிர்வாய் மேவும்
அரிமொழி உம்முரூமான் அரியெழின்
மனையிற் சார்ந்தார்"
எனக் கூறிக் களிப்பூட்டுகிறார். இப்பாடலில் 'அரி' என்ற ஒரே சொல் திரும்ப எதுகையாகவும் மோனையாகவும் அமைந்து சுவையூட்டுகிறது
நேர்வழி பிறழ்ந்து அல்லலுறும் தன் மகனை அடக்கி நேர் வழிகாணச் செய்ய ஆயுத பாணியாகத் தன்னை உரு மாற்றிக் கொண்ட அபூபக்கர் சித்தீக் அவர்கள் ஆவேசத்துடன் தன் புரவியேறி தன் மைந்தனோடு மோத சேருகளம் நோக்கிச் செல்லலானார். அவர் ஏறிச் சென்ற புரவியின் நடையைக் கூறவந்த குஞ்சுமூகப் புலவர் அவர்கள்,
"காலில் ஐங்கதியைக் காட்டிக்
கருததினுள் திடத்தைக் காட்டி
மேலினில் வியர்ப்புக் காட்டி
விழியினில் எரியைக் காட்டி
தாறுவின் தலையைக் காட்டி
தரை விடும் துகளைக் காட்டி
வாவினில் விசையைக் காட்டி
வயப்பரி நடந்த தம்மா"
எனக் குதிரை சென்ற காட்சியை அழகுமிகு சொல்லோவியமாக வடித்து மகிழ்விக்கிறார்.
தன் மகன் நல்வழிப்பட இறையருளை இறைஞ்சிப் புறப்பட்ட அபூபக்கர் சித்திக் அவர்கள் இடைவழியில் முர்ரத் என்பவரைச் சந்திக்கிறார். மக்காவாசியான முர்ரத் வழிவழி வந்த இறைவணக்க முறையைக் கைவிட்டு