பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/158

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


மதினாவிலிருந்து அண்ணலார் அனுப்பிய படை வந்துசேரும் முன்னரே அபு சுப்யானின் பெரும்படை அதி மூர்க்கத்தனமாக அப்துல் ரஹ்மானின் சிறுபடையை தாக்கிச் சின்னாபின்னப்படுத்த முயன்றது. இறைவனின் அருளை வேண்டியவர்களாக அப்துர் ரஹ்மானும் செய்யிதத்தும் களம் புகுந்து, அபுசுப்யானின் படைகளை கதிகலங்கச் செய்கினறனர்.

இரு படைகளின் மோதலைச் சிறப்பாகச் சித்தரிக்கிறார் புலவர் அதிலும் குறிப்பாக பெண் அடலேறாகப் போர்க் களத்தே புகுந்து, இஸ்லாத்தின் எதிரிகளை வெட்டி வீழ்த்தும் வீராங்கனை செய்யிதத்தின வீரத்தைப் பெரிதும் பாராட்டிப் பாடுகின்றார்.

செய்யிதத்து குதிரைபமீதமர்ந்து அடலேறுபோல பகைவர்களை அம்பெய்து கொன்று குவிக்கிறாள். இக் காட்சியை,

“எடுத்தவில்லுடன் இடக்கையும்
இலங்கு செம்பு ருக்கின்
தொடுத்த சட்டையும் உரததையும்
துளைத்து அகத்துயிரை
அடுத்து வெளவி அப்புறம் புகுந்து
எமன்கரத் தளித்தே
தடுத்த தாரெனத் தாவின
தையல்கைச் சரங்கள்”

‘புலியென நடத்தினள் புவி நடுங்கவே' எனக் கூறி பெரியமிதப்படும் குஞ்சு மூசுப் புலவர்,

“செய்யி தத்தெனும் சிற்றிடைத்
தையல் தன்சுரத் தாரைவாள்