பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/168

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166



குறுகிய கால வட்டத்திற்குள் நடந்து முடியும் இக்கதைப்பாத்திரங்களும் மிகச் சிலராகவே அமைகின்றனர். இஸ்லாமிய நெறியையும் மக்களாட்சி முறையையும் காக்க நடந்த இப்போரில் மிகுதியும் இடம் பெறுவது அவலச் சுவையேயாகும்.

அநீதிக்கெதிராக கொதித்தெழும் அலி (ரலி) அவர்களின் பேரர் காசீமின் வீரமும் செயலும் இலக்கியம் முழுதும் பரக்கப் பேசப்படுகின்றது. மூல எதிரியான எசீதின் பெயர் இவ்விலக்கியத்தில் கூறப்பட்டாலும் நேரடிப் பாத்திரமாக இக்கதையில் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

எளிய சொற்களைக் கொண்டு ஈரடிக் கண்ணிகளாலான இவ்விலக்கியம் துயர உணர்வை மிகுவிக்கும் வகையில் சந்தச் சிறப்போடு அமைந்துள்ளது வீரப் போரிட்டு எதிரியின் வாளுக்கு இறையாக வீழ்ந்து கிடக்கும காசீமின் உடலைக் கண்டபோது அவரது தாயாரும் சிறிய தந்தையார் இமாம் ஹூசைனாரும் காசீமின் மனைவியும் கதறியழுகின்றனர் சிறிய தந்தை, தன் அண்ணன் மகனை மடியில் போட்டு மிகுந்த துயரத்துடன் வாய் விட்டு புலம்புவதாக,

“எங்கள் குடிக்கரசே மகனே
இருப்பாய் என்றெண்ணியிருந்தேன்
தங்க மகனாரே எங்கள்
தலைவிதி யிதுவோ!

என அவலச்சுவை ததும்பும் சொற்சித்திரமாகப் புனைந்து காட்டிப் படிப்போரின் கண்களையும் குளமாக்கி விடுகின்றார்.

காசீமின் மனைவி, மணமுடித்த கணநேரத்தில் வீர மரணத்தைத் தழுவிய தன் கணவர் காசீம் உடல் கண்டு,