179
இந்நொண்டி நாடகத்தின் மூலம், சீதக்காதியின் உற்றார் உறவினர்களின் பெயர்களையும், அவரது அன்பு சூழலில், அறவணைப்பில் வாழ்ந்து வந்த தமிழ்ப்புலவர் பெருமக்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. கீழக்கரையில் செய்தக்காதி கொலு வீற்றிருக்கும் காட்சியை,
"கானுலா வியகொடையான்-செய்தக்காதி
கதிர்ப்பிரபை தங்குந்தங்கச்சவுக்கையின்மேல்
பிறைநுதலியர் மதவேள்-மீராப்
பிள்ளை மரக்காயர் வள்ளலுடன்
திறமுட னடுததிருந்தே-பலபல
செய்திகள் யோசனை செய்திடவே
வரிசை செய்யிது நயினா-னுடைசுதன்
வாலமன் மதன் ஒருபாலிருக்க
அரசர்கள் தொழுசரணன்-குட்டி
ஆலிப் பிள்ளை யொருபாலிருக்க
மாதர்கள் மதரூபன்-எனவரு
மாப்பிள்ளை மாமுநயினாப் பிள்ளையும்
பூதர புயசயிலன்-சேகுக் கண்டுப்
பூபதியுடனொரு புறத்திருக்கச்
சந்தமும் தமிழ்தேறுங்-கல்வித்
தலைவர் மகிழ்உமறுப் புலவருடன்
செந்தமிழ்க் கந்தசாமிப்-புலவனுஞ்
சீராட்டெனத் தமிழ் பாராட்டவே"
எனக் கூறுவதன் மூலம் செய்தக்காதியுடன் வரலாற்றுத் தொடர்புடைய பல பெரியார்களை அறிய முடிகிறது.
செய்தக்காதி கொலுவீற்றிருக்கும்போது. அவையில், இசைமழை பொழியப்பட்டதைக் கூறும்போது.