185
"நிதக்கத்துள் ளாக்குபிறர் நெஞ்சம் பிளக்கவரும்
சதக்கத்துல் லா உபய தாமரைத்தாள் போற்றி
செய்வாம்"
என அக்காலத்தில் இறையருள் பெற்ற இஸ்லாமிய ஞானச் செல்வராக விளங்கிய சதக்கத்துல்லா அப்பா அவர்களையும் வாழ்த்திப் போற்றிப் பாடுகிறார். பின்னர், சீதக்காதி வள்ளலின் முன்னோர்களை வாழ்த்தி விட்டு இறுதியாக,
"செங்கமலை மார்பிற் சிறந்தசெய் தக்காதி
மங்கள வாழ்த்தும் மணவாழ்த்தும்
வாழ்த்துகிறேன்"
என வாழ்த்தி, வாழ்த்துப்பாவை முடிக்கிறார்.
திருமண வாழ்த்து நூலின் நாயகரான செய்தக்காதியைப் பாராட்டும் போது, அவரது முன்னோர்களின் பெருமையெல்லாம் சொல்லிப் பாடுகிறார். அவர்தம் பெருமைகளையெல்லாம் செய்தக்காதியின் பெருமையாக கூறி மகிழ்கிறார்.
இப்பாராட்டினிடையே சில சுவையான நிகழ்ச்சிகளும் காட்டப்படுகின்றன.
ஒரு சமயம் மதுரைப் பாண்டியன் இந்நூலின் பாட்டுடைத் தலைவருக்கு விருந்தளித்தான். விருந்துண்ட இடத்தை எச்சில் பட்ட இடமாகக் கருதி சாணம் தெளித்ததையறிந்து. அச்செயலுக்குப் பாடங் கற்பிக்கும் வகையில், மதுரைப் பாண்டியனுக்கு வள்ளல் பெருந்தகை விருந்தளித்தார். பாண்டியன் அறுசுவை உணவுண்டு முடித்தவுடன், விருந்துண்ட கூடத்தையே வள்ளல் எரித்துவிட்டாராம். இந்த விவரத்தை,