பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/193

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

அணிகலன்களின் பெயர்களும் நீண் தொரு பாட்டியலாகத் தரப்படுகின்றன. மணவினை இஸ்லாமிய நெறிப்படி,

"சொல்லரிதாங் கொத்துவா வோதிப்
                                                   பொருளிசைத்து
வல்ல மிசுறுமொகரா எழுதினரே
நிக்கா வெழுதி நிறைந்த களரியெல்லாம்
ஓக்கவே பாத்திகா ஓதிப் புகழ்ந்த பின்பு"

எனக் கூறுவதன் மூலம் தீனெறிப்படி குத்பா வோதி. மஹர் எழுதி, நிக்காஹ் நிகழ்த்தி. பாத்திஹா ஓதி மணவினை முடித்ததை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறார்.

மணமக்களைப் பாராட்டியுரைத்தல், மைத்துனர்களின் கேலிப்பேச்சு , மற்றும் வரிசை வழங்கு சடங்குடன் வாழ்த்துரைத்து முடிக்கிறார் ஆசிரியர்.

இஸ்லாமியத் திருமணமாயினும் பந்தக்கால் நடுதல். குரலையிடுதல் போன்ற அக்காலத் தமிழ்ச் சமுதாயத்தின் பழக்க வழக்கங்கள் இந்நூலுள் நீக்கமற நிறைந்துள்ளன. மணமகனைப் பாராட்டும் போதும் மணமகளைப் புகழும் போதும் இந்து சமயத்தைச் சார்ந்த இராமனோடும் அருந்ததியோடும் ஒப்பிட்டுப் பாராட்டவே செய்கிறார் ஆசிரியர்

இஸ்லாமிய நெறி முறைக்கிணங்க நிக்காஹ் நிகழ்ந்ததாகக் காட்டிய போதிலும்,

"குணமாக வெல்லோருங் கூடிக் குரவையிட
மணவாளன் றன்கையால் மங்கலியங் கட்டினரே"

எனக்கூறும்போது மணமகன் நேரடியாக மணப்பெண்ணின் கழுத்தில் தாலிகட்டியதாகக் கூறப்படுகின்றது இப்பழக்கம் முஸ்லிமல்லாதவர்களிடத்து மட்டும் காணப்படும் பழக்க-