பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

198

யேயும் அரபகத்திலிருந்து தமிழகம் வந்து நிலை கொண்டு விட்ட அரபுகளிடையேயும் வெகுவாக பழக்கத்திலிருந்ததற்கான சான்றுகள் பரவலாகக் கிடைக்கவே செய்கிறது.

சுமார் நானுாறு ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த ஹாபிழ் அமீர் அலி வலி என்பவர் முனைப்புடன் அரபுத் தமிழ் வளர்ச்சியில் கருத்தூன்றி அதன் வளர்ச்சிக்கு உழைத்து வந்தார் என்பதை புகழ்பெற்ற இஸ்லாமிய இலக்கியப் பதிப்பாசிரியரான கண்ணகுமது மகுதுரம் முகம்மது புலவர் அவர்கள் 'தீன் நெறி விளக்கம்’ என்ற நூலிலுள்ள ஒரு பாடலில்,

"வெல்லிய அரபுத் தமிழ் உண்டாக்கிய
மேன்மை ஹாபித் அமீர் வலி"

எனக் கூறுகிறார் ஹாபிழ் அமீர் வலி அரபுத் தமிழை உண்டாக்கினார் என்பதைவிட காலத்தின் இன்றியமையாத் தேவையாக அரபக- தமிழக முஸ்லிம்களால் உருவாக்கப்படட அரபுத் தமிழை முனைப்புடன் கட்டுக்கோப்பாக திருத்தமுடன் வளர்த்து வளமடையச் செய்த பெருமைக்குரியவர் என்று பாராட்டுவதே சரியாக இருக்கும்

சுமார் நானுாறு ஆண்டுகட்கு முன்னரே அரபுத் தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள் உருவாக்கப்பட்டதற்கான சான்றுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்த போதிலும் பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்தவரான காயல் பட்டணம் ஷாம் ஷிகாபுத்தின் வலி எனும் இறைநேசச் செல்வர் எழுதிய நூற்றுக்கணக்கான அரபுத் தமிழ் பாடங்களே இன்று நாம் அறியக் கிடைக்கின்றன.

இஸ்லாமிய ஞானம் நிரம்பப் பெற்ற ஷாமு ஷிஹாபுத் தீன் வலி அவர்கள் தொழுகைக்கான வழிமுறைகள் இஸ்லாமிய நெறி சம்பந்தப்பட்ட சட்ட திட்டங்கள், தீன்நெறி உணர்த்தும் ஒழுக்கக் கோட்பாடுகள் பெருமானாரின் பெரு வாழ்வைச் சுட்டும் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பெருமளவில்