பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/205

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

203


முனாஜாத்து ஆகிய நான்கு இலக்கிய வகைகளை புது வகைத் தமிழ் இலக்கிய வடிவங்களாகத் தமிழில் கொண்டு வந்து சேர்த்தாலும் அவற்றின் செய்யுள் வடிவம் இயன்ற வரை தமிழ்இலக்கண அமைப்பை அடியொற்றியே அமைக்கப்பட்டன என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்.

படைப்போர், நொண்டி நாடகம், திருமண வாழ்த்து, அரபுத் தமிழ் ஆகிய நான்கு புதுவகை இலக்கிய வடிவங்களை தமிழுக்கென்றே தமிழ்ப் பெயர்களோடு தோற்றுவித்து தமிழ் இலக்கியப் பயிரைச் செழிக்கச் செய்துள்ளனர் இஸ்லாமியத் தமிழ்ப் புவவர்கள் என்பது தமிழ் இலக்கிய வரலாற்று உணமையாகும்.

தமிழகத்தில் எழுந்த சமயங்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்துக்கு அப்பாலிருந்து வந்த சமயங்களைச் சேர்ந்தவர்களும் தமிழில் காலங்காலமாகவே இருந்து வரும் பழைய இலக்கிய அமைப்பு முறைகளை அப்படியே அடியொற்றி இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றினார்கள். ஆனால் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழ் முஸ்லிம்கள் மட்டுமே பழைய இலக்கியப் அமைப்பு முறைகள் அனைத்தையும் கையாண்டு தமிழ் இலக்கிய படைப்புகளை நூற்றுக்கணக்கில் எழுதிக் குவித்ததோடு அமையாது முனைந்து எட்டு புதிய இலக்கிய வடிவங்களைத் தோற்றுவித்து, தமிழ் இலக்கண முறைகள் வழுவாது, இலக்கியப் படைப்புகளை பெருமளவில் உருவாக்கியதன் மூலம காலத்தால் அழிக்க முடியாத தமிழ்ப் பணியை ஆற்றிய பெருமையை வரலாற்று பூர்வமாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள்.

“இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி” என்று முழங்கும் தமிழ் முஸ்லிம்கள், தமிழ் வளர்ச்சியை தங்கள் வளர்ச்சியாக எண்ணி உழைப்பதைப் பெருமையாகக் கருதி தமிழ்ப்பணியை தளராது தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.