23
இந்நூலின் ஆசிரியரின் பெயர், அவர் வாழ்ந்த ஊர் ஆகிய விவரங்களை நூலாசிரியரே கடவுள் வாழ்த்துப் பாடலில்.
"புயவாய்ந்த மதுரை கீழ்பாற்
பொருந்திய சுலையு மானிற்
செயலாய்ந்த முல்லாமிய்யா
செயிமுரை செய்ய இந்நூல்
இயலாய்ந்த முதலிசெய்து
இசுஹாக்கெனு வகுதை நாடன்
பயஹாம்பர் அருள் சேர் வண்ணப்
பரிமளம் பகரலுற் றான்"
எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்நூலாசிரியரின் இயற்பெயர் செய்து இஸ்ஹாக் என்பதாகும். செய்கு முதலி இஸ்ஹாக்' என்று வழங்குதலும் உண்டு என்பர் 'வகுதை நாடன்' என இவர் வாழ்ந்த ஊர் குறிக்கப்படுவதால் வகுதை எனும் ஊரைச் சார்ந்தவர் என்பது தெளிவாகிறது. இன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் வங்கக் கடலோரம் அமைந்துள்ள கீழக்கரை எனும் ஊரே அன்று வகுதை நகராக வழங்கிய ஊர் என்று ஆய்வாளர்கள் குறிக்கின்றனர். வகுதை நாடன் எனக் குறிப்பிடப்படினும் இந்நூலாசிரியராகிய செய்கு முதலி இஸ்ஹாக் எனும் வண்ணப் பரிமளப் புலவர் 'ஆயிர மசலா'வெனும் இவ்வருங்காப்பியத்தை மதுரை மாநகரிலிருந்தே இயற்றினார் என்பது கடவுள் வாழ்த்துப் பகுதியால் தெளிவாக அறிய முடிகிறது.
இதன் ஆசிரியர் 'வண்ணப் பரிமளப் புலவர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். சங்க காலம் தொட்டே மூலப் பெயர் தெரியாத காரணத்தால் மட்டுமல்ல. புலவர்களின் இலக்கியத் தனித்தன்மையைக் குறிக்கும் வண்ணம்