38
உலகம் தோன்றிய வரலாற்றையும் முதல் நபியும் முதல் மனிதருமான ஆதாம் நபியின் வரலாற்றையும் விரித் துரைக்கும் நூலாசிரியர் எளிய உவமைகளின் மூலம் இலக்கியச் சுவை ததும்ப அரிய பெரிய கருத்துக்களையும் சிந்தைகொள் மொழியில் செப்பி தம் ஆற்றலை வெளிப்படுத்துகிறார். பெருமானார். அப்துல்லா இப்னு சலாமுக்குக் கடிதம் எழுத உக்காசை அழைக்க உக்காசு உடன் வந்து செயல்பட்டதை,
"பூட்டுசிலை நாண் எறியும்
பூங்கணையது என்றே
ஒட்டமொடு சாதிபுனு
உக்காசு வந்தார்!"
என்றும், நபிகள் நாதர் விடுத்த ஒலையை எடுத்துச் சென்றவர் ஓட்டத்தை 'வேட்டை மான் ஓட்டம் போல’ என்றெல்லாம் எளிய உவமைகளின் மூலம் இலக்கிய நயம் பெருக்குகிறார். அவர்கால பழமொழிளும்கூட இந்நூலுள் இடம் பெற்றதன் மூலம் இவை இலக்கியத் தரம் பெற்று விடுகின்றன.
பெருமானாரைக் காணும் பேறு பெற்றவர்களும் அவரது அமுத மொழியைச் செவி மடுத்தவர்களும் அடைகின்ற பெரும் பேற்றைக் கூறும்போது.
"தீதாறு கண்டவர்க்கும்
திருவசனம் கேட்டவர்க்கும்
வேதாந்தம் மிகவுண்டாம்
வெற்றிகளும் பெற்றிடுவார்"
எனத் தெளிந்த நீரோட்டம் போலத் தங்குதடையின்றி கருத்துக்களைக் கூறுவதன் மூலம் ஆயிரம் மசலாவென்னும் அதிசயபுராணத்தில் அப்துல்லா இப்னு சலாமுக்குப் பெருமானார் அவர்கள் இறை திருமறையாம் திருக்குர்ஆன் வழி-