39
யிலும் ஹதீஸ் அடிப்படையிலும் கூறும் இனிய செய்திகளைப் படிப்போர் பெறுகின்ற-பெறப்போகும் பயனையும் உணர்த்தி விடுகின்றார் வண்ணப் பரிமளப் புலவர்
பல்வேறு வண்ணங்களில் அமைந்துள்ள இந்நூற்பாக்கள் நடைச் சிறப்பும் மொழிச் சிறப்பும் கொண்டு இந் நூலை காலத்தால் மட்டுமல்லாது இலக்கியத் தரத்திலும் முதன்மை வாய்ந்த இஸ்லாமிய இலக்கியமாக ஆக்கிவிடுகின்றது.
மசலா இலக்கிய வகைகளுள் காலத்தால் இரண்டாம் இடத்தைப பெறுவது 'வெள்ளாட்டி மசலா' எனும் நூலாகும். இதன் முழுப் பெயர் 'தவத்துது என்ற வெள்ளாட்டி மசலா' என்பதாகும்.
இந்நூலை இயற்றியவர் காயல்பட்டணத்தைச் சேர்ந்த ஷெய்கப்துல் காதிறு லெப்பை என்பவராவார். இந்நூல் 1856-ம் ஆண்டில் வெளிவந்தது. ஆயிர மசலா நூலுக்குப் பின்னர் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னரே இரண்டாவது மசலா நூலான 'வெள்ளாட்டி மசலா வெளிவந்துள்ளது இங்குக் கவனிக்கத் தக்கதாகும்.
இதுவரை இந்நூல் ஐந்துபதிப்புகளாக வெளிவந்திருந்த போதிலும் ஒவ்வொரு பதிப்பிலும் நூல் தலைப்பில் மாற்றம் திருத்தங்களுடனேயே வெளிவந்துள்ளன. கீழக்கரை செய்கப்துல் காதிர் என்பவர் பதிப்பித்த இரண்டாம் பதிப்பு நூல் "தவத்துது என்னும் வெள்ளாட்டி மசலா மறுமொழி வசனம்’ என்னும் பெயரில் வெளிவந்தது. அப்துல் அஜீஸ் சாஹிப் என்பவர் பதிப்பித்து வெளியிட்ட மூன்றாம் பதிப்பு "வெள்ளாட்டி மசலா" எனும் சுருங்கிய பெயரிலேயே வெளி வந்தது. நான்காம் பதிப்பை 1917-ம் ஆண்டில் வெளியிட்ட முகம்மது லெப்பை சாஹிப் என்பவர் "வெள்ளாட்டி மசலா மறுமொழி விலாசம்" என்ற பெயரில் வெளிக்-