45
"வணக்கமில்லாத ஆலிம் - மழையில்லாத மேகம்
கொடையில்லாத சீமான் - பழமில்லா மரம்
பொறுமையில்லாத மங்கையர் - தண்ணிரில்லாத ஆறு
நீதியில்லா மன்னன் - மேய்ப்பாரில்லாத ஆடு
பாவமீட்சியில்லா வாலிபன் - ஒடில்லாத வீடு
வெட்கமில்லா மங்கை - உப்பில்லாத உணவு"
எனக் கூறும் பதில்கள் மூலம் தர்க்கவாத அடிப்படையில் சுவையான உவமான உவமேயங்களுடன் சாதாரண மனிதனும் இலக்கியச் சுவை கலந்த பொது அறிவைப் பெற முடிகிறது.
வெள்ளாட்டி மசலாவில் மற்ற இரு மசலா இலக்கியங்களைக் காட்டிலும் சற்று அதிகமான அளவில் அரபிய பெர்சியச் சொற்கள் க
லந்துள்ளன. ஆயினும் கேள்வியிற்கானும் சுவையும் பதிலில் மிளிரும் சிந்தனைத் தெளிவும் படிப்போரைப் பெரிதும் ஈர்க்கத் தவறவில்லை. சுருங்கச் சொன்னால்; மூன்று தமிழ் மசலா நூல்களிலும் இஸ்லாமியச் செய்திகளை மிக அதிகமாகத் தருவது வெள்ளாட்டி மசலாவேயாகும்.
மசலா வகை இலக்கியப் படைப்புகளுள் காலத்தால் மூன்றாவது இடத்தைப் பெறுவது 'நூற மசலா’ எனும் இலக்கியமாகும்.
செய்யுள் வடிவில் அமைந்துள்ள நூறு மசலா நூலின் ஆசிரியர் பற்றிய விவரங்களையோ எழுதப்பட்ட காலக் குறிப்பையோ, எழுதப்பட்ட சூழல் பற்றிய விவரங்களையோ அரங்கேற்றச் செய்திகளையோ நூலிலிருந்து நம்மால் தெரிந்துகொள்ள இயலவில்லை. முன்னோர் பாடிய நூறு மசலா’ எனும் குறிப்பைத் தவிர நூலில் வேறு விவரங்கள் இல்லை. ஆயினும் நூலின் முதற்பதிப்பு 1876-ல் முகம்மது சாஹிப் என்பவரால் வெளியிடப்