பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

 சேற்றிலமிழ் யானை தன்னில்

மிக்க திறமிருந்தாங்கு என் செயும்?

ஆற்றைவிட்டுக் கரையில்வந்த

கொல்லவரு முதலைதான் என்செயும்?

தூண்டிலிலார் கடற்புலிதான்

தன்னின் சோர்விலாத பலமென்செயும்?

தாண்டும் வீரன் கால் முடங்கில்

பல சாமர்த்தியந்தான் என் செயும்?

இது தான் விதியின் விளையாட்டு!

இந்த அவனி மீதில் ஆரென் செய்வார்?

எனக் கூறுகிறார்.

உருவத்திலும் வலிமையிலும் மிகப் பெரியது யானை. ஆனால், அது பரந்த ஆழ்ந்த, சேற்றில் மாட்டிக் கொண்டால் அதனால் என்ன செய்ய முடியும்? முதலை தண்ணிரில இருக்கும்போது எததகைய வலிமைமிக்க பெரிய விலங்கானாலும் அதனை எளிதாக இழுத்துச் சென்று கொல் லும் வலிமை படைத்தது. ஆனால், அம்முதலை நீரை விட்டு நீங்கி நிலத்திற் கிடந்தால் அதன் வலிமையனைத்தும் அதைவிட்டு நீங்கிவிடுவது இயல்பு. கடல் மீன்களில் உருவிலும் வலிமையிலும் பெரியதான சுறாமீன் தூண்டியலில் மாட்டிவிட்டால் அதனால் எதுவும் செய்ய இயலாமல் வலிமை இழந்து போகும். தாண்டிக் குதித்து வீரம் நிலைநாட்டும் வாலிபனின் கால் முறிந்து முடமானால் அவன் வீர விளையாட்டும் ஆட்டமும் இருக்குமிடம் தெரியாமல் அடங்கி விடும்’ எனச் சாதாரண உவமான உவ மேயங்கள் மூலம் விதியின் வலிமை எத்தகையது எனபதை விளக்குகிறார் ஆசிரியர்.

இன்னும் மன்னன் அகமது ஷாவும் அவன் மனைவியும் நாடு கடத்தப்பட்ட தன் மகனும் கானகததே செல்லுங்கால்