51
"இந்தவித அழகுகொண்ட இந்த ஏந்திழையாள்
தன்னை மணக்க
சொந்தமாகப் புரியவரும் நல்லவ தூயரசர்
தங்களிடம்
நூறுமசலாவின் கேள்வியினை நுவருகிற
எவர்களாலும்
கூறுடனே பொருமசலா தரும் பொருட்
டான் தெரியாமலே
மயங்குகின்றார்கள் இப்போதிலே வந்த
மன்னர்களைக் குறைவு சொல்லிப்
பயங்கரமாயவர்களுயிர் தள்னைப் பறிக்
கின்றாள் எமன் போல"
எனக் கூறி நூறு மசலா கேட்கும் மெஹர்பானின் செயற்பாட்டினையும் அதன் விளைவாக மன்னர் பலர் மாண்டு விட்ட செய்தியினையும் விளக்குகின்றார். அஞ்சா நெஞ்சினளாகக் கேள்விக் கணைகளால் பல மன்னர்களை வீழ்த்தி மண்ணறைக்குள் அனுப்பிய மெஹர்பான் இளவரசி, துணிவுடன் தன் மசலாவுக்குப் பதில் கூற வந்த அப்பாஸைக்கண்டு திகைத்துத் தன்னிலை மயங்கிய பாவையோ எனக் குறிக்கிறார்.
'சிங்கத்தைக் கண்டஞ்சுகின்ற நல்ல
செப்புமிளம் பிடியொத்தாள்
பங்கமவராது அங்கிருந்த தோழிப்பாவையர்
களிலே நினைத்தால்
வெற்றியுள்ள பலமன்னர் முன்னர்
வென்ற நந்த மண்புதல்வி
பற்றிலா தவொரு விடையிற்றானே
பாவையைப் போலாயினளே’
ஆயிரமசலா, வெள்ளாட்டி மசலாக்களில் கூறப்படாத பல புதிய செய்திகள் மசலாக்களாக இந் நூலினுள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.உதாரணமாக