56
கன்னலெனும் திருமொழியாள் மெல்லக்
கடையின் வீதிதனில் நடந்தாள்"
எனச் சொற்சுவை பொங்கக் கூறுகிறார்.
அப்பாஸின் முன்னிலையில் அழகுச் சிலையாக நிற்கும் மெஹர்பானுவின் அழகில் மயங்கிய அப்பாஸ் அவள் விந்தைசெறி மேனி எழிலைக் கண்டு மயங்கி நிற்கும் மயக்க உணர்வை ஆசிரியர்
"மானுடமோ மடக்கொடியோ இவள்
வஞ்சிக்கொடி இளமயிலோ
தேனினமோ சிறு கிளியோ செம்பொன்
செஞ்சிலைவேள் ரதிமாதோ
ஆனினமா காமாதி நல்ல
ஆடரங்கோ தாமரையோ
மீனினமோ விழிகளிரண்டுந்
துய்ய வெண்ணிலவோ இவள்மேனி
மேவிய சீர்கொள் குழல்முகிலோ இந்திர
வில்வினையோ இவள் புருவம்
தூய்மையுள்ள வெள்ளலரோ நல்ல
துலக்கமுள்ள இவள் நாசி
நன்மையுளள கடைப்பிடியோ கன
நாகரிகத் திருமொழிதான்
மன்மதன்றன கண் விழியோ செழி
மாதனையோ இவள் கனிவாய்
மாதளையோயிவள் கனிவாய் சொல்லு
மவன் கமுகோவிவள் கழுத்துக்
கீதமொழியோ இவள் சொல் மதிக்கும்
புரிக்கொம் பெனுமுலையாள்
போதமுற்ற தாமரையோ செழும்
பூரணச் சந்திர முகமோ
ஏதுநிக ரிவளுக் கொவ்வா......"