57
என அழகுமிழும் மெஹர்பானுவின் மேனியழகை பாராட்டிப் போற்றுவதன் மூலம் நூறு மசலாவின் இலக்கிய நயத்தை வெகுவாக உயர்த்துகிறார் ஆசிரியர்.
இவ்வாறு நூறு மசலா ஆசிரியர் ஆங்காங்கே போதிய இடைவெளிகளை ஏற்படுத்தி நாயக. நாயகியை வர்ணிக்கவும் அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்ச்சி களை விரிவாகப் பேசவும் முனைந்து அதில் வெற்றியும் பெற்று விடுகிறார்.
இறுதியாக மெஹர்பானுவின் மசலாவுக்கெல்லாம் தக்க விடை கூறிய அப்பாஸ் அவளை மணமுடித்துக் கொள்கிறான். இவர்கள் திருமணத்தை விரிவாக விளக்கிக் கூறும் ஆசிரியர், அப்பாஸ் தான் இழந்துவிட்ட நாட்டையும் செல்வத்தையும் மீண்டும் பெற்று பெருவாழ்வு வாழ்ந்ததை.
"விந்தையுள்ள அப்பாசும்
மெஹர்பானும் மகிழ்ந்திருந்தார்
சுந்தரஞ்சேர் அஹமதுஷா அவர்
தோகையரும் வாழ்ந்திருந்தார்"
என வாழ்த்துரைத்து முடிக்கிறார்.
நூறு மசலா ஆசிரியர் கையாளும் மொழியும் நடையும் மற்ற இரு மசலாக்களினின்றும் சற்று வேறுபட்டுள்ளது என்பது கருத்திற் கொள்ள வேண்டிய ஒன்றாகும். நீரொழுக்குப் போன்ற மொழி நடையில் அன்றாட வாழ்வில் கையாலும் சாதாரணச் சொற்களை வெகு லாவகமாகக் கையாண்டு எளிய இனிய மொழி நடையாக ஆக்கி விடுகின்றார். சாதாரண மொழியறிவுடையோரும் எளிதாக இந்நூலைக் கற்றுத் தெளிய முடிகிறது."ஆஹாவென 'கூகூவென' என அன்றாட வாழ்வில் மக்கள் கையாளும் சாதாரண ஒலிக் குறிப்புச் சொற்களை ஆங்காங்கே பெய்-