பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/72

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70

அச்சுறுத்தியது. அக்கனவுக்கு என்ன பொருள் எனத் தெரியாது திகைத்தான். அரசவை அறிஞர்களை அழைத்து "கறுத்த இருள் கதிரை மூட, இருட்கிடாவொன்று பசுவைத் தின்பது போல' தான் கண்ட கனவைக் கூறி பலனைக் கூற அவர்களால் இயலவில்லை. இக்கனவிற்குத் தக்க விளக்கப் தருவோர் தகு வெகுமதி பெறுவர் என அறிவித்தான். யாராலும் நுட்ப விளக்கம் தரவியலாத இக்கனவுக்கு ஈசுபு அவர்களால் மட்டுமே விளக்கம் கூற முடியும் என்பதைச் செவியுற்ற மிசிறு மன்னன் சிறையிலிருந்த ஈசுபு அவர்களை நேரில் அழைத்து தான் கண்ட கனவின் பலனைக் கூறுமாறு கேட்டான். அதற்கு மறு மொழியாக ஈசுபு சிறைக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் கனவுக்குத் தக்கப் பொருள் விளக்கம் செய்வதாகக் கூறினார். இந்நிபந்தனைக்கு இணங்கிய மன்னன் அசீசு, கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தான். பின், மன்னன் தன் கனவைக் கூற, அதற்குண்டான பலனை ,

"கண்ட கனவினைச் சொல்லுமென
       காதலுடனதை மன்னன் சொல்ல
விண்ட னரீசுட மன்னன் கண்ட
       வேதனையுள்ள சொப்பனத்தை
ஒன்றா முதலிந்த வருடந் தொட்டு
       உண்ணியே புரண்டு தழைத்திருக்கும்
என்றார் அதற்குப்பின் ஏழாண்டுதான்
       இலங்கு பசியுன்றன் பஞ்சமுமே”

எனக் கனவுப் பலனை ஈசுபு கூறியதாக மதாறுப் புலவர் பாடுகிறார்.

கனவுப் பலன் கூறிய ஈசுபு நபி மீது மன்னன் அசீசுக்கு அன்பு அதிகரித்தது. அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள அவாவினான். அவரது வரலாற்றுை அக்கறை