87
"அப்போ பொருநாயன் முனிந்துசொல்வான்
அன்பர் புவிதனில் உமறுகத்தாப்
செப்பமுடியாத தலைமையேற்றார்
செகத்தில் அவரைப்போல் தலைமையோ நீ?
ஒப்ப முடனவர் தொழுகைதன்னை
ஒருநாளும் கலாச் செய்ததுண்டோ?
வெப்பக் கோபமாய்ப் பெரிய நாயன்
வெறுத்து நரகத்தில் விடுவானென்றார்"
என முனிந்து கூறியதாக ஆசிரியர் ஷாமுனா லெப்பைப் புலவர் பாடுகிறார். இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்லாது மனிதகுல வரலாற்றிலேயே நீதிநெறி வழுவா ஆட்சித் தலைமைக்கும் இறைச் சிந்தனைக்கும் இணையற்ற எடுத்துக்காட்டாக விளங்கிய இஸ்லாத்தின் இரண்டாம் கலீபா உமர் கத்தாப் (ரலி) அவர்களைச் சான்று காட்டி அல்லாஹ் இடித்துக் கூறுவதாக புலவர் மொழிகிறார். நீதிநெறி மிக்க நல்லாட்சியளித்த கலீபா உமறு கததாப் (ரலி) அவர்கள் எத்தகைய இக்கட்டான நெருக்கடி நேரத்திலும் ஒருவேளைத் தொழுகை கூடத் தவறிய வரல்லர் நான் அளித்த ஆட்சித் தலைமையையும் நீதிபுரக்கும் பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியதோடு, நான் விதித்த தொழுகையையும் இம்மியும் பிசகாது கடை பிடித்து வாழ்ந்த உமர்கத்தாபைவிட நீங்கள் உயர்ந்தவர்களோ? எனக் கூறி அவர்கட்கு நரக வாழ்வை நல்குவான் என இப்பாடல் கூறுகிறது.
மூன்றாது அணியாகச் செல்வக் சீமான்கள் வருவர். இறை வணக்கம் புரிய இயலாமற் போனதற்கான காரணத்தை இறைவனிடம எடுத்துக்கூறி விளக்க முனையும் செல்வர், "வரையிலா செல்வத்தை வாரி வழங்கியதால் எங்களின் முழுக் கவனமும் இரவு பகலாகச் செல்வத்தைப் பெருக்குவதி-