93
இந்த வகையினுள் உலகத்தில்
எங்கள் தமைநல்லா வடிமை செய்தாய்
முந்த வடிமையுள் ஆகாவிடில்
முறைமை உடன் நன்றாய்த் தொழுது
கொள்வோம்
தொந்த முடன் உன்றன் அடியாருக்குத்
தினமும் அடிமையாய் நீயேன்செய்தாய்?
பந்த வடிமையாய்ப் படைத்ததனால்
பணிந்து நாங்களும் தொழுதோமில்லை"
என ஆசிரியர் ஷாமுனா லெப்பை கூறுகிறார்.
இவ்வாறு, பல்வேறு வாழ்க்கை முறைகளைக் கொண்ட மனித சமுதாயத்தினரை ஏழு பகுப்பாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் தொழுகை தவறினால் நரகத் துன்பம் அடைந்தே தீருவர் என்பதை காரணகாரிய விளக்கங்கோடு எடுத்துக் கூறுகிறது ‘இருஷாது நாமா’ நூல் அதோடு மனிதகுல மேன்மைக்கு தொழுகை எவ்வளவு இன்றியமையாதது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறி விளக்குகிறார். தொழுகை தவறின் வல்ல அல்லாஹ்வின் சினத்திற்கு ஆளாக நேருமே என அஞ்சி நிற்கும் மக்களை நோக்கி.
"அல்லாஹ் படைப்பினில் ஆண்பெண்ணோரே!
அஞ்சித் தொழநாயன் உதவி செய்வான்
பொல்லாப் பெரும்பாவம் உள்ளதெல்லாம்
பெரியோன் தனை நாடிக் கெஞ்சிக்கேளும்
நல்லாத் தினந்தொறும தொழுதுகொண்டால்
நாயன் பிழையெல்லாம் பொறுத்திடுவான்
வல்ல நபியுல்லா மன்றாட்டமும்
வல்லோன தீதாரும் கிருபையுண்டாம்"
எனக் கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் அன்பையும் பரிவையும் கருணையையும் எளிதாகப் பெற அரிய சாதனமாக