பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1

திகழ்ந்துள்ளனர். ஞானச்சுடரேந்திய மார்க்கமேதைகள் பலரைப் பெற்றெடுத்த இவலுரைபபற்றி செய்குகள் பெருத்ததும் கோட் டாறு செய்த்தான் வெறுத்ததும் கோட்டாறு’ என்னும் பழ மொழி ஒனறு வழங்கி வருகிறது செய்குகள் மிகுதியாகத் தோன்றியதாலேயே செய்த்தான் இவ்வூரை வெறுத்து ஒதுக் கின்ை அல்லது ஒதுங்கினை போலும்

இவ்வூரின் சிறப்புக்கு இங்கே மறைந்து வாழும் இறை நேயச் செல்வர்கள் முக்கிய காரணமாக இருககின்றனர். ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்பு அரபு நாட்டிலிருந்து இஸ்லாமிய மார்க்கப் பிரச்சாரம் செய்ய வந்து, இங்கே அடக்கமாகிப் பல காரணங்களைக் காட்டும் ஹஸ்ரத் பாவா காசீம் ஒலியுல்லா அவர்கள், அன்னர்களில் தலையாயவர் ஆவார். இராஜ பாதையில் அமைந்திருக்கும் இவர்களின் சமாதித்தலம் வேம்படிப் பள்ளி என்ற பெயரால் வழங்கி வருகிறது. பிற்காலத்துத் தோன்றிய பல ஞான மேதைகள் தீட்சை பெற்றதெல்லாம் இவ் வேம்படிப் பள்ளியில் தான். இதனைக் காரணச் சிறப்பு வாய்ந்த வேம்படிப் பள்ளி’ என்றே வழங்குவர் .

வெளிநாட்டிலிருந்து கைக் குழந்தையுடன் வந்து காக்குழி யிலேயே சமாதியாகிக கொண்ட ஹஸ்ரத் பீவி பாத்திமா நாச்சி யார் அவர்களின் சமாதி இவ்வூரிலுள்ள கடைத் தெருவில் உள்ளது. அன்றியும் குறுஞ்சாலியன் விளேக் கடற்கரையில் ஒரு பெட்டியுள் மிதந்து இவ்வூர் மக்களின் கனவில் அறிவிக்கப்பட்டு அடக்கமான ஷெய்கு அப்துர் ரஹ்மான் சாகிபு ஒலியுல்லா அவர் களின் சமாதி பள்ளித் தெருவில் உள்ளது. மாதிஹார் ரசூல் செய்கு சதகத்துல்லா அப்பா அவர்களின் தந்தையார் செய்கு சுலைமான் அப்பா அவர்கள் தங்கிய வீடு சுலைமான் அப்பா பள்ளி யாகப் பெருமாள் குளம் தெருவில் உள்ளது. காயல் பட்டணம் தைக்கா சாகிபு ஒலியுல்லாவின் சகோதரர் செய்கு முகம்மது சாகிபு அவர்களின் சமாதியும் வேம்படிப் பள்ளியை ஒட்டி உள்ளது. மேலும செய்கு பகர்ே மன்னன் சாகிபு ஒலியுல்லா, செய்கு ஒட்ட மன்னன சாகிபு ஒலியுல்லா, குஞ்ஞாலி மன்னன் சாகிபு ஒலியுல்லா, வாவும் மாதாய் (ரலி) ஆகியோரின் சமாதி களையும் இவ்வூர் பெற்றுத் திகழ்கினறது. இத்தகைய இறை நேயச் செல்வர்களைக் கண்டும் கேட்டும் பெற்ற இதயப் பரிபக் குவம் கொண்ட பாரமபரியம் இவ்வூர் மக்களுக்கு உண்டு.

இ. பி. எட்டாம் நூற்ருண்டை ஒட்டித் தஞ்சையை ஆண்ட பெரும்பிடுகு முத்தரையனைப் பாடிய கோட்டாற்று இளம் பெரு