பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடையநல்லூர் புலவர் ஞானி ஷெய்களு ஷெய்கு உதுமான்

அரபகத்திலிருந்து தமிழகத்திற்கும், கேரளத்திற்கும், தமிழக கேரளக்கடற்கரையோரப பட்டினங்களின் வழியாக, கி.பி ஏழாம் நூற்ருண்டு இறுதியிலிருந்து இஸ்லாமியர்கள் வரலாயினர். இதற்குத் தகுந்த அரிய சான்றுகள் கிடைத்த வண்ணமிருக் கின்றன. இவவாருகப் பல காலக் கட்டங்களில் வந்துற்று உறைந்தோர்களுள் திட்டுவிளை (கன்னியாகுமரி மாவட்டம்) ஷெய்கு உதுமான் மஷாயிக்(ரஹ்) எனும் "அப்பச்சி அப்பா'அவர் களும் குறிப்பிடத்தக்கவராவார். இவர் கேரளத்தின் கொச்சி போன்ற பிற பகுதிகளிலும், தமிழகத்தின் நாகர்கோவில், கோட்டாறு போன்ற பிறஇடங்களிலும் தங்கி, பின்பு, திட்டுவிளை யில் உறைந்த தவச் செம்மலாவார். இஸ்லாம் இங்கெல்லாம் இனிது தழைத்தோங்க அறப்பணி அருட்போதனை புரிந்தவரு மாவார். இவ்வருட் செம்மலின் மகளுர் ஷெய்கு மீரான் லெப்பை. இவர் தம் அருமை மகளுர் புலவர் ஞானி ஷெய்ஞ ஷெய்கு உதுமான் ஆவார்.

'கைத்தறிக்குக் கடையநல்லூர்' என்பது புகழாரம். இஸ்லாமியப் சூஃபி (ஞானி) பக்தித் தமிழ் பூத்ததும், வளர்ந்ததும் இந்நல்லூரே. திருமதிலுர்’ இதன ப ழ ைம ப் பெயர். இவண் ஹிஜ்ரி 1111இல் முஹர்ரம் பிறை 10ஆம்நாளில் செய்கு உதுமான் பிறந்தார். இவர் முஹையத்தீன அப்துல்காதிர் ஜீலானி அவர் களின் பதினைந்தாவது தலைமுறை ஆவாா. இளமையிலேயே இறைத் தேட்டத்திலும் நாட்டத்திலும் ஈடுபடலாஞர். தந்தை யார் இவர்தம் முதல் குருவாக இருந்தார். பின் காதிரிய்யா தரீக்கா அஷ்ஷெய்கு முஹம்மது (ஸ்பிய்யிரஹ்)விடம் பைஅத்' பெற்ருர். எனினும் நெஞ்சம் நிறைவுருது, கெளதுல் அஃலம முகியத்தீன் அப்துல்காதர் ஜீலானி அவர்களிடம் இறைஞ்சி வேண்டி நின்ருர். இவர்களின் ஆக்ஞைப்படி ஸய்யிது மஸ்வூது (ரலி) அமர்த்தப்பட்டார். இவர்தம் சோதனைகளில் வெற்றி பெற்று இவரையே தம ஞான குருவாகப் பெற்ருர்,

இவர் அரபு, உருது, பார்ஸிமொழிப் புலமை மிக்கவராக விளங்கினர். ஹிஜ்ரி 1143ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் முஹம்மது லி ம பூஸ்கான் புலவர் ஞானி புகழறிந்து, போற்றி நிலங்க3