பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

கடினம். இக் கும்மி, காப்பு வெணபா-1; 98 கண்ணிகளால் ஆனது. முதல் சில (1-13) கணணிகள் காப்பாக அமைந்துள் ளன. நூரே முஹம்மதிய்யா-இறசூல் பாதம்-ஆதம முதல, அன்பியாக்கள், அபூபக்ா-உமர்-உதுமான்-அலி.-ஹஸனஹ-லைன்-வள்ளல் முஹியத்தீன-ஷாகுல் ஹமீது-குரு மஸ் ஆது-ஆகியோர்களின் துணை வேண்டுகின்ருர்’. முஸ்லிம் புலவர் கள் பாடிய காப்புப் பாடலாய்வு தனி ஆயவிற்குரியது. அரபுச் சொற்கள் இக்கும்மியில் கலந்துள்ளன. இறைத் தததுவததினை,

'துவக்க ஆதி அளுதியுமாய்ச்

சொலலிய ஆணபெண இலாததுவாய்

எவர்ககும் எட்டாப் பழம்பொருளை

இறைஞ்சிக் கும்மியடியுங்கடி.' (53)

என்கிருர், ஐந்தெழுத்து தத்துவத்தினே."

அஹதுவாகி அஹமதுவாய்

அல்ஹமதுலில்லாஹ் வெனும பொருளாய்

உஹதத்தாக வருகின்ற லிபத்தை

உவந்து குமமியடியுங்கடி [54]

என இரததினச் சுருக்கமாகப் பாடி யருள்கிருர், பிராணத் தத்துவத்தினை ஒர்ந்துணாந்த யோகி,

'இருள்வெளியும் ஒன்ருய்க் கலந்தே ஏகாந்த மாகிய மைதானில

வரும் பிரான தத்துவம தன்னை

மகிழ்நது கும்மி யடியுங்கடி.” 凸 [58]

என சரதத்துவம் பேசுகிரு.ர். ஒன்றிறையோனே,

வெளியிலே யொளிவா யிலங்கி மெய்ப்பொருளாய், அருமைப் பொருளாய்த் தெளிய வோரலியானவன் [40]

வாக்கு மனதிற்கும் எட்டாத வான் பொருள் [70] மெய்யன் (80) வானபற்றி நின்ற மறை பொருள் (73)

எனப் பலவாருகக் கூறி மகிழ்ந்து கும்.மியடிக்கச் சொல்கிரு.ர்.

கும்மி இசையோடு-நடன இசையூட்டும் பாவடிகளாக, ஞானப் பொருளையும் பூட்டி வைத்துள்ளார். அதனை.