பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 39

ஒளி மின்னு உமிழ் பெட்டகம் இன்றும் இவரது இல்லத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை இன்றும் பார்க்கலாம். இவர் பரம்பரையினரான ஹபீபு:அரசர் ஜித்தாவிற்கும் மக்காவிற் கும் இடையில் தோண்டிய கிணறும் கு றி ப் பி ட த் த க் க து. இவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான பல ஏக்கர் அகலமுள்ள கீழ்ப்பண்டகசாலை, நடுப்பணடகசாலை, மேலப்பணடகசாலைகள் பல அன்றும் இன்றும் இருந்து வருகின்றன. சில பழுதுபட் டுள்ளன. கீழக்கரை இயற்கை துறைமுகப்பட்டினமாக இலங்கு வதால் பிறநாடுகளுடன் வாணிகத் தொடர்புக்கு வளமாக விளங் கியது. சேதுபதி மன்னர் அனுமதியுடன், டச்சுக்காரர்கள் 1754இல் கீழக்கரையில் கட்டப்பட்ட வர்த்தகப் பண்டகசாலை இவரின் முன்ளுேருக்குச் சொநதமானது. இன்று சிதைந்த நிலை யில் இருக்கிறது. பல கப்பல்களுக்குச் சொந்தக்காரர்கள் இவா பரம்பரையினர். இச்சந்ததியினரின் பண்டகசாலைகள் கொக்சி போன்ற இடங்களிலும், பர்மா, மலேசியா, ஜாவா போன்ற கீழை நாடுகளிலும் இருந்தன. இன்றும் இலங்கையில் இருப்ப தைக் காணலாம். இத்தகு செல்வச் சீருயர் கு ல த் தி ல் அருட் செல்வப்பேறுடை-இறைச் செலவத்தில் பற்றுடை சூஃபிஞானி யம்மா ஆசியா உம்மா தோன்றிஞர் எனின் வியப்பனருே!

ஆசியா உம்மா கீழக்கரை குதுபுஸ்ஸமான் வகவ்துல் அவான் கல்வத்து நாயகத்தின் முதன்மைச் சீடராவர். இளமை யிலே தனித்திருந்து, இறைநேசச் செல்வர்கள் மீது துதிப்பாடல் களை முளுஜாததுகளைப் பாடும் அற்புத வன்மைப் பெற்றிருந்தார். இறையின்பத்தில் இலயித்து, இறைவனைப்பற்றிய அகமியங்களே யும் பாடிப் பரவிஞர் வேனிற் காலங்களில் இவர் தனக்குச் சொந்தமான கடற்கரையோர நடுப்பண்டகசாலைக்குரிய தென் னஞ் சோலேயில் பல திங்கள் தனிமையில் தவமிருநதார். அருட் பாடல்களை பாடியருளினர். மற்றவாகளிடம் அதிகம் பேசாது. மெளனமாக-மேல் வீட்டில் (மாடியில்) தனிமையாக பல காலங்கள் செலவிட்டதால் இவரை 'மேல் வீட்டுப் பிள்ளை' எனச் செல்லப் பெயரிட்டும் அழைத்தனர். "சுமமாயிரு’ப் பதில் சுகங் கண்டவர்களன்ருே ஞானிகள்: ஆசியா உம்மா ஹஜ்ஜுக் கடமையினையும் உரிய காலத்தில் ஆற்றிய அம்மையாராவர். இவர் பாடியருளிய பல பாடல்கள் கி ைட க் க ப் பெறவில்லை. கிடைக்கப் பெற்ற பாடல் திரட்டு மெய்ஞ்ஞானத் தீப இரத் தினம்’ என அரபுத்தமிழில் அமைந்துளளது. இது முன அச்சுப் பிரதிகளைக் கொண்டும், அச்சாகாத ஏட்டுப் பிரதிகளையும் கொண்டு 1976இல் திருவல்லிக்கேணி மஜுதிய்யா அச்சுக்கூடத் தில் அச்சிடப்பட்டு வெளி வந்துள்ளது. தனது எணபதாவது அ 5