பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தக்கலை மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா

பேராசிரியர் கா. முகம்மது பாரூக், எம். ஏ.,

அறிவும், அன்பும், உலகியல் ஆசைகளைத துறத்தலுமே சூஃபி நெறியின் சிறப்பு நோககங்களாகும் சூஃபி போதனைகளில் உட் கருதது நிறைந்திருக்கும் சூஃபி நெறியின நிலையான தன்ம்ை குரு-சீட அமைப்பு முறையாகும். சூஃபிகள் இறைஞானத்தைத் தலைமையானதாகக் கொண்டு பிறிதனைத்தையும் தவிர்ப்பர்; புறககண்ணை மூடி அகக் கண்ணைத் திறக்க அவர்கள் பயிறசி பெற் றிருப்பர்.

சூஃபி நெறிக் கொள்கைகள் பற்றிப் பலரும் பலவிதமான விளக்கங்கள் கொடுத்துள்ளனர். ஹலரத் ஷெயகு அப்துல்காதிா pலானி (ரலி) அவாகள் இறைவனுக்கு உரியோனுகவும், மக்களுக்கு நல்லோனுகவும் இருப்பவனே சூஃபி ஞானி' என்று கூறியுள்ளார்.

தத்துவஞானி அபூஹாமிது முஹம்மது அல் கஸ்ஸாலி அவர்கள் கூறுகின்ருர்கள்: நான சூஃபி நெறியை நன்கு படித்துக் கடைபிடித்தேன். அதனை முழுமையாக அறிய ஞான விளக்கமும செயல்முறையும வேணடும். ஆத மா வை ஆசையென்னும கொடுரமான நுகத்தடியிலிருந்து விடுவிததுக் கெட்ட பிறவிக் குணங்களிலிருநதும், தவருண மனேவிகாரங்களிலிருநதும் தூய் மைப் படுதத வேணடும் பரிசுத்தமான இதயத்தில்தான் இறை வனுக்கு இருக்க இடமுணடு; அவனது திருநாமத்தைத் துதிக்க வும் முடியும். சூஃபி நெறியென்பது சொல்லைவிட செயலில் தான் அதிகம் அடங்கியுள்ளது.

இந்திய சூஃபி ஞானி காஜா நஸ்ருத்தீன் குறிப்பிடுகினருர் ‘சூஃபி நெறி மூன்று முக்கிய கொள்கைகளையுடைது. அவை (1) காய சுத்தி (தஸ்கிய நப்ஸ்), (2) இதய சுத்தி (திஸ்பியா

கல்பு), (3) ஆத்ம சுததி (தஜலியயாரூஹ்)"

அபூயளtதுல் பிஸ்தாமி, சூஃபிகள இறைவனின் பிள்ளைகள் என மொழிந்துள்ளார்கள். அந்நூரி என்பார் பிறருககுத் தொல்லை தராது இதயத்துக்கு மகிழ்ச்சியூட்டுபவரே சூஃபி' எனக் கூறியள்ளார்.