பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I50

பீர்முகம்மது அப்பா அவர்களின் சமாதி தக்கலை என்னும் ஊரில் உள்ளது. அவலுர் கன்னியாகுமரி மாவட்டத்தலைநகராகிய நாகர்கோவிலிலிருந்து பததுக்கல் தொலைவில-திருவனந்தபுரம் சாலையில்-உள்ளது. அவ்வூரிலுள்ள தர்காவில் ஆண்டுதோறும் இஸ்லாமியத் திங்களாம் ரஜபு பதின்ைகாம் நாள் இரவு ஆண்டு விழா நடைபெறும். அவ்வாண்டு விழாவில் பெருந்திரளாகக் கூடு கின்ற பல்சமய அன்பர்கள் மத்தியில் பீர்முகம்மது அப்பா அவாகள் பாடிய ஞானப் புகழசசி எனனும் நூலின் பாடல்கள் இரவிலிருந்து காலைவரை பாடப்பட்டு வருகின்றன.

பீர்முகம்மது அப்பா அவர்கள் பல்துறைச் செல்வராக விளங்கி யுள்ளார்கள். சூஃபி ஞானியாம் பீர்முகம்மது அப்பா அவர்கள் இறைநேயச் செல்வர்களாம் வலியுல்லாக்களில் ஒருவராவார்கள். இஸ்லாமியச் சட்டதிட்டங்களைப் பாடல்கள் மூலம் அறிவிக்கும் இப்பெரியாரை இஸ்லாமியத் தமிழுலகம் மாாக்கமேதை” யாகவும் மதிக்கின்றது. பதினெண சித்தர்கள் அருளிச் செய்த “பெரிய ஞானக்கோவை! என்னும் நூல் தொகுதியில் பீர்முகம்மது அப்பா அவா.களின் ஞானரத்தினக் குறவஞ்சியும் இடம் பெற் றுள்ளததாலின் அவர்கள் சிததராகவும சிறந்திருக்கின்ருர்கள். சாதி சமயங்கடந்த நிலையில் அனைவராலும் அப்பா' என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுவதும அவர்தம் செல்வாக்கை எடுத்துக் காட்டுகின்றது.

மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா அவர்கள் பாடிய பாடல்கள் பதினெண்ணுயிரம் ஆகும். அவர்கள் பாடல்களில்

இன்று நூல் வடிவில் கிடைப்பவை:

நூலின்பெயர் பாடல் எண்ணிக்கை

1. ஞானப்பால் 3.3 2. ஞானப பூட்டு 39 8. ஞானப் புகழ்ச்சி 6 & 7 4. ஞானமணிமாலை 24.2 5. ஞானக்குறம், “ 73 6. ஞானரத்தினக் குறவஞ்சி 64 7. ஞான ஆனந்தக் களிப்பு 16 8. திருமெய்ஞ்ஞானச் சரநூல் 30 9, ஞான நடனம 10 10. ஞான முச்சு ர்ப் பதிகங்கள் 238

12 ஞான விகட சமர்த்து 4