பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.3

பாடல் வரை ஆட்சி செலுத்தும் அடைக்கலப்பகுதியில் 265 சிறப்புப் பெயர்களால் இறைபுகழ் இயம்பப்படுகின்றது. நூலின் இறுதியிலுள்ள துஆ இரப்பு, என்னும பகுதியில் இறைவனின் எணணற்ற குணங்களில் 375 உணர்த்தப்படுகின்றது. இஸ்லாமியத் திருமறையாம் திருக்குர்ஆனின் தோற்றுவாய் அதிகாரமான 'அல்ஹமது குராவை மெய்ஞ்ஞானியார் பீரப்பா அவர்கள் இப்பகுதியில் இணைத்துப் பாடியுள்ளார்கள். ஞானப் புகழ்ச்சியில இடம் பெறும்,

"ஆதம்பெறு மக்க ளெல்லாரிலும் நம்மை அன்பு கொண்டே வேதநபி யிறசூல் உம்மத்தாககும் வெகு நன்றிககுப் பாதங்கள் மேலும் சிரங்கீழு மாய்ப்பத்து நூருயிர மாண்டு ஒதித் தவஞ் செய்தாலும் போதா தாமன் றுகந்ததுக்கே."

என்னும் பாடலில் வெளிப்படும் நன்றியை நவிலும் அப்பாவின் பாடலுக்கு ஒப்பே காணமுடிவதில்லை.

ஞானமணி மாலை

ஷரீ அத், தரீகத் ஹசீகத், மஃரீபத் என்னும் நான்கு வகை ஞான தெறிகளே விளக்கிச் செல்லும் ஞானமணி மாலையின் பாடல்கள் வெண்பா, ஆசிரிய விருத்தம், கலித்துறை கலி விருத்தம், கலிவெண்பா, கொச்சகக் கலிப்பா முதலிய யாப்பு நிலைகளைப் பெற்று வந்துள்ளன. மணியான ஞானக் கருத்துக்களை மலையாக்கிக் காட்டும் இந்நூலின பாடல்கள் பெரும்பாலும் அந்தாதியாய் அமைந்துள்ளன. 242 பாடல்களினல் இலங்கும் இந்நூலின் அருமையை அறியச் சான்று நல்கும் பாட்டொன்று,

'குருக்களற்ற ஞானமும் குணங்களற்ற சீடனும் கருக்களறற வித்தையும் களங்கமுற்ற புத்தியும் உருக்கமற்ற கெஞ்சமும உணர்ச்சியற்ற வினவாயலாம் சுருக்கமற்ற சோதியைத் தொடர்ச்சியற்ற தொக்குமே.”

ஆசானில்லாத ஞானமும் நற்குணவொழுக்க மற்ற சீடனும் பே ா ல் வ ன பெருஞ்சோதியைக் கண்டும் பயன்படுத்தப் பார்க்காத பேதைமை நிலைக்கு உவமை செய்யப்படும் திறன் சுவைத்தின்புறத் தக்கது.

ஞானக் குறம்

சிற்றிலக்கியப் பிரிவில் இடம்பெறும் குறவஞ்சி அமைப்பு - லில் பி டு வெண்பாக்களம்,