பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணங்குடி மஸ்தான்

அல்ஹாஜ் எஸ். எம். சுலைமான், ஐ. ஏ. எஸ்.

بع - آبی ، توگه ஆத்மஞானிகள் நாடு சமயம் இவற்றிற்கு அப்பாற்பட்டு உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானவர்கள். 'உலகம்

உயர்ந்தோர் மாட்டே', என்று தொல்காப்பியம் இயம்புகிறது. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’, என்ற பரநத நோக்குடையவர்கள் ஆத்மஞானிகள். தங்கள் திருவருட்பாக்கள் மூலம் ஆன்ம சக்தியைப் பெருக்கியும், இதையசுததியைப் பேணி வளர்த்தும் வந்துள்ளார்கள். அருட்பாக்கள் அதிகமாக மலர்ந் தது ஈரான் நாட்டிலேதான. தமிழகத்திலும் ஞானிகள பலர் தோன்றி தரமான பக்தி இலக்கியத்தைப் படைத்துள்ளார்கள். தமிழ் ஞானிகள் சித்தர்கள் என அழைக்கப்படுவார்கள. இஸ் லாமிய ஞானிகள் சூஃபிகள் என அழைக்கப்படுவார்கள். தமிழகத்தில் தோன்றிய முஸ்லிம் ஆத்ம ஞானிகள் இஸ்லாமிய அருட்பெரும் ஞானத்தைத் தமிழ் மரபுடன் இணைத்து அமுதப் பாக்களே யாத்துள்ளனர். குணங்குடி மஸ்தான் சிறந்த மெய்ஞ் ஞானி; சிறந்த சன்மார்க்க மேதையும் ஆவார். அவரது திருப் பாடற்திரட்டு முத்தான பக் தி இலக்கியமாகும். அதைத் தமிழறிந்த எல்லாச் சமயத்தினரும் படித்துப்படித்து இன்புறு கின்றனர்.

குணங்குடி மஸ்தான் சாகிபின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர். முகவை மாவட்டத்தைச் சேர்ந்த தம் தந்தையின் ஊரான தொண்டியில் அவர் பிறத்தாரென்றும், தம் தாயின் ஊரான குணங்குடியில் அவர் பிறந்தாரென்றும் வேறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன. மஸ்து’ என்ற பாரசீகச் சொல் மயக்கம தரக்கூடிய பொருளே, உள்ளக்கிளர்ச்சியூட்டக்கூடிய பொருளேக் குறிக்கும். இறைவன் மீது மையலாகி, தம்முணர்வை இழந்து, தம்மையே இறைவனில் அழித்துக் கொண்ட இறைப் பித்தரை மஸ்தான் என்ற சொல் குறிக்கும். மஸ்தான் என்ற பெயரோடு அவரின் ஊர்ப்பெயர் சேர்த்து குணங்குடி மஸ்தான் சாகிப் என்று ஆயிற்று. இவரது காலம் கி. பி. 1787 முதல் கி. பி. 1835 வரை ஆகும். உலகச் சந்தடியிலிருந்து ஒதுங்க்