பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163

இறைவனை உடல், பொருள், ஆவி, அகம். புறம் எல்லாமாக வும், கானும் பொருள் அனைத்துமாகவும், காணுப்பொருள் எவை இருப்பினும் அவையாகவும் காண்பது இறையடியார்களின் இயல்பு. மஸ்தான்சாகிப் பாடுகிருர்:

"ஊளுகி ஊனில் உயிராகி எவ்வுலகுமாய்

ஒன்ருய் இரண்டும் ஆகி உள்ளாகி, வெளியாகி, ஒளியாகி, இருளாகி

ஊருடன் பேருமாகிக் கங்குல் பகலாகி மதியாகி ரவியாகி, வெளி

கண்ட பொருள் எவையுமாகி காணுகி, யோகி, யவருகி. யவளாகி

காதமொடு பூதமாகி’’

'கண்டபொருள் அத்தனையுமாகி கின்று, அவைகளுங்

காணுத காரணத்தைக்

கருதரிய சித்தாய், விசிதாமாய், கின்று

இலங்கா கின்ற காரணத்தை,'

என்று தயம்பட இசைக்கிரு.ர்.

பக்திப் பாடல்கள், தம் மனத்தில் மண்டிக்கிடககும மாசுகளை அகற்றித் தூய்மைப்படுத்தி, தொண்டு செய்யும் பரிபக்குவத்தை யும், இறையருள் நாட்டத்தையும் ஊட்டி வளர்ப்பன. மனதைப் புனிதப்படுத்த மஸ்தான் சாகிப் கூறும் அறிவுரையைக் காண் போம். வேட்டை மேற்செல்வோர் தம்முடன் வேட்டை தாயைக் கொண்டு செல்ல வேண்டுமே தவிர வெறி நாயை அல்ல. வெறி நாய் வேட்டை மீது பாய்வதை விடுத்து இட்டுச்செல்பவர் மீது பாய்ந்து கடிக்கும். இறையருளைப்பெற தவம், அன்பு அருள், தொனடு ஆகிய பணபுகளைப் பொருந்திக்கொள்ளாமல், அகங் காரம், ஆசை. வெகுளி, அழுக்கிாறு முதலிய வெறிக்குணங் களுக்கு இடமளிப்பது வெறி நாய் கொண்டுவேட்டைக்குச்சென்று தம்மையே அழித்துக கொள்வதற்கு ஒப்பாகும். பாட்டு இதோ:

வேட்டை பெரிதென்றே வெறிநாயைக் கைப்பிடித்து : காட்டிற் புகலாமே கண்ணே றகுமானே" *్క

o

  • = je ! 4தம் - க் * to of i டிர்

மீஸ்தான் சாகிப் எவ்வுயிரும் தம்முயிராய்க் காணும் தகைமையாளர். உலகிற் காணும் தீமைகளை அவர் தம்மீது ஏற்றி எழுப்புகின்ற உயிர்ப்புக் குரலேக் கேட்போம்: