பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165

மஸ்தான் சாகிபின் இறைஞ்சுதலில், ஏக்கமும், இரக்கமும் உருக்கமும் இழையோடுகின்றன.

'காகமாய் கின்று கதறிக் கதறி அழும் எனக்

கை அணைத்து அருள் புரியவும்.’’

என்று நெக்குருகப் பாடுகின்ருர்.

அந்தக் காகம் எது? அது கதறக் காரணம் என்ன?

ஓர் அமாவாசை இரவு. நடுநிசி. மையிருட்டு. பனியோ மழைபோல் கொட்டுகிறது. பம்பரம்போல் ஆடிய அலைகடல் ஆய்ந்து ஒய்ந்து அமைதியாகத் துயில்கின்றது. நெஞ்சின் சலன எண்ணங்கள் போன்று பாய் மரக்கப்பல் ஒன்று ஆடி ஆடிச் செல் கின்றது. அது மாலையிலே புறப்பட்ட கப்பல். இப்போதோ சண்ணுக்கெட்டாத தொலைவில் அசைந்து செல்கிறது. அக் கப்பலின் கம்பத்தில் ஒரு காகம் தன்னந்தனியே பரிதாபகரமாக அமர்ந்திருக்கிறது. அது வாட்டும் குளிரால் வெடவெடென்று நடுங்குகிறது. இந்த நேரத்தில் அக்கப்பலின் பணியாள் காகத்தை விரட்டி அடிக்கிருன். அந்தோ பரிதாபம்! காகம் வெருண்டு பறக்கிறது. எங்கு பார்க்கிலும் பயங்கர இருள். பார்வை தெரியவில்லை. இரைந்து கரைந்தவாறே திசை தெரியாமல் அங்குமிங்கும் பறந்து அலமருகிறது காகம்.

'ஏகப் பெருவெளியில் இருட்கடலில் கம்பமற்ற

காகம் அதுவானேன் கண்ணே றகுமானே!"

என்று றகுமான் கண்ணியில் அந்தக் காகத்தின் பரிதாப நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிருர். "இறைவா அந்தக் காகத்தைப் போன்று நானும் இக்காசினியில் கரை சேரும் வகை தெரியாமல் கரைத்து கண்ணிர் மல்கி திக்கற்று நிற்கிறேன்; என்னை அணைத்து ஆட்கொள்ளுவாய்', என்று நெஞ்சம் நெகிழ்ந்து புலம்புகிரு.ர். அப்பாடலை மீண்டும் செவி மடுப்போம்:

'காகமாய் நின்று கதறிக்கதறி அழும் எனக்

கை அணைத்து அருள் புரியவும்'

பரந்தகடலில் தான் தத்தளிப்பதாக அல்லவா சொன்னர், அது என்ன கடல்? இருட்கடல். பாலக்கடல். அதைக் கடப்பதற்கு இறைவனகிய மரக்கலமே துணை என்று நம்புகிரு.ர்.

பவக்கடல் நீக்கிப் பரிவாய் கரையேற்றுங்

கவிழா மரக்கலமே கண்ணே பராபரமே."