பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

விஞ்ஞானத்தின் அடிப்படையைக் குறித்து விளக்குகின்ற அறிஞர்கள் மூன்று முக்கிய அம்சங்களை முன் வைக்கிரு.ர்கள். அவற்றுள் முதன்மையானது,

  • விஷயங்களைப் பற்றிய கூற்று நேரடியாகக் கண்டறி யப்பட்ட குறிப்புகளை ஆதாரமாகக் கொணடிருக்க வேண்டுமே யல்லாது தகக சான்றுகள் இல்லாத வெறும் மேற்கோள்களின் அடிப்படையின் மீது நிறுவப் பெறுதல் கூடாது.

-பெட்ரண்ட் ரஸ்ஸல்

விஞ்ஞானத்தின் இந்த முதன்மையான அடிப்படையை மெய்ஞ்ஞானம் கடைப்பிடிக்கிறதா எனருல் கடைப்பிடிக்கிறது என்பதுதான் உண்ம்ை.

உலகில் ஏராளமான மதங்கள் இருக்கின்றன. பண்டைகால இந்து மதம், சீனாவிலும், கிரேக்கத்திலும் பாரசீகத்திலும் வழங்கும் மதங்கள், இருணட ஆஃப்ரிககக் கனடத்தில் இன்றும் நிலவும் வழிபாட்டு முறைகள் இவைகளையெல்லாம் ஆதி மதங் கள் என்று கூறலாம்.

யூத மதம், கிருஸ்துவ மதம், இஸ்லாமிய மதம், புத்த மதம் ஜைன மதம் இவற்றை வரலாற்றுக்கால மதங்கள் எனறு பிரிக்கலாம்.

சீக்கிய மதம், காதியானிகள், கிறிஸ்துவ மதத்தின் பிற்காலப் பிரிவுகள் இந்து மதத்தில் தோன்றிய மதச் சீர்திருத்த இயக்கங் கள் ஆகியவற்றை பிற்கால மதங்கள் என்று விவரத்திற்காகக கொள்ளலாம்.

உலகில் இவை தவிர இன்னும் எத்தனை மதங்களிருந்தாலும் அவை அனைத்தும் ஒரு கொள்கையில மட்டும் உறுதியாக நிறகின்றன.

மதங்களின் அந்த முதற்கொள்கை இந்த நில உலகமும் பிரபஞ்சமும் மட்டுமே உண்மையல்ல என்பதாகும்.

மனிதனின் உடலில் ஆன்மா' என்று ஒரு பொருள் இருக் கிறது. அது மரணத்துக்குப் பின்னர் வாழந்திருக்கக் கூடியது

என்பது எல்லா மதங்களிலும் வழங்கக் கூடிய கருத்தாகும்.

மறுமை, ஆன்மா என்ற மதத்தின் ಶ இரண்டு கருத்துக்

叠 尊 螺 詹 喇 邨