பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

எனவே தான் உயிரற்ற சடலமாகி உயிரை அறிய முனைவதைவிட அது முழு இயக்கததுடன் இருக்கும் போதே அதனை ஆராய வேண்டுமென மெய்ஞ்ஞானம் கூறுகிறது. அப்பா அவர்கள் இப்படிப் பாடுகிறார்கள்.

சூத்திரப் பாவை கயிரற்று வீழுமுன் சூட்சுமக் கயிற்றினைப் பாரடா- அதி சூட்சுமக கயிற்றினைப் பாரடா!

Lot seek for the Cord of cause: cause that holds thy body amass' Lo! seek for the cord of cause, Before it leaves thee! Alas!

இப்படி விஞ்ஞான நோக்கோடு மெய்ஞ்ஞானிகள் மேற் கொணட ஆராய்சசிகளிலிருநது கிடைத்த உண்மைகள் வேதங்களாகவும, ஆகமங்களாகவும், இன்று உலகிலே காணப்படு கினறன.

மெய்ஞ்ஞானக் கருத்துக்களை கலை உணர்ச்சியின கற்பனை கண்ணோட்டம்' என்று ஒரு தவறான அபிப்பிராயம் விஞ்ஞான உலகில் உண்டாகியிருப்பதன் காரணத்தால் தான் விஞ்ஞானம மெயஞ்ஞானத்தின்-கருத்துக்களை ஏற்கத் தயங்குகிறது. இந்தத தடையை நீக்க கற்பனைக்கும்-தீர்க்க தரிசனத்துககும இடையிலுள்ள வேறுபாட்டை அறிந்து கொள்வது முறையாகும.

தீர்க்க தரிசனம் (Prophecy) நபித்துவம் என்னும் இந்த வகைப்பட்ட அறிவு மனித அறிவின் ஒரு பரிணாமமாகும் இது தனணில தானே ஆராய்ந்து பார்த்தாலொழிய விளங்கிககொள்ள முடியாததாகும். நபிகள் நாயகம் அவர்கள கனவு நுபுவத்தில நூற்றில் ஒரு பங்கு என்றார்கள். கனவைப் பற்றிய ஆராய்ச்சியில் விஞ்ஞானம் பரிசுத்தமாக இறங்கவில்லை. அது "தீர்கக தரிசனம’’ பதார்த்த ஞானமே எனபதை தெளிவுபடுததும் எனறு இமாம் கஸ்ஸாலி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கவிதையும், இலக்கியமும்-கலையும் விஷயங்களைப் பற்றிய அன்புணர்ச்சியேயன்றி அறிவின வயப்பட்டதன்று.

அறிவியல் கண்கொண்டு பிரபஞ்சத்தின் தோற்றத்தை ஆராய்வதைப் பொறுத்துக கொள்ளாத ஒரு ஆங்கிலக் கவிஞர் இந்த நூற்றாண்டில் இப்படியும் பாடியிருக்கிறார்.