பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179

"ஒ விஞ்ஞானமே புளிய மரத்தடியில் நான் அனுபவித்த வேனிற்காலக கனவைக் கிழித்து சின் பிைனனமாக்கி விட்டாயே! என்ற இந்தக் கருத்து மெயஞ்ஞானத்துக்கு ஒவவாததாகும்,

நபிகள நாயகப (ஸல்) அவர்களே இஸ்லாத்தின தலைசிறந்த மெய்ஞ்ஞானி ஆவார்கள். அவா களுடைய தீர்க்கதரிசனம் - திருக்குர்ஆன் என்பது மாபெரும் ஷெய்கு முகையித்தீன் இபுனுல் அரபியின கருத்தாகும். திருக்குர்ஆனின் வசனங்கள் கற்பனை கவிதை வரிகளே எனறு அராபியர்கள் பேச முனைந்தபோது அதற்கு ஒரு எச்சரிக்கை கூட திரு குர்ஆனிலேயே வழங்கப்பட் டிருக்கிறது.

மேலும் நபிகள் நாயகம் அவர்கள் இப்படியும் ஒரு கருத்தைக் கூறிஞர்கள்!

'உலகத்தைப் பற்றிய அறிவு மரணத்தோடு உங்களைவிட்டுப் பிரிநது விடும்; உங்களைப் பற்றிய அறிவோ மரணத்துக்குப் பின்னரும் உங்களுக்குத் துணையாக வரும்.”

விஞ்ஞானம் உலகத்தை ஆராய முனைகிறது.

மெய்ஞ்ஞானம மனிதனை ஆராய முனைகிறது.

விஞ்ஞானம் உடலை ஆராய்ந்து உயிரைத்தொட முனைகிறது. மெயஞ்ஞானம் உயிரை ஆராய்ந்து உடலுக்கும் தீர்வு காண் கிறது விஞ்ஞானம புறத்தை ஆராய்நது பிரபஞ்சத்தையும் நடசததிர தொகுதிகளையும் கண்டு வியக்கிறது. மெயய்ஞ்ஞானம் அகததை ஆராய்நது ஆனம, சூசக்கும அகமிய உலகங்களே ஆண்டு வியககிறது.

“பிரபஞ்சததைப் பற்றி சித்திக்கும் தோறும் நமது மனதில் ஒரு பயங்கர எழில தோனறக காண்கிருேம், இந்த பயங்கர எழிலின பினனணியில ஏதோ ஒரு சக்தி ஊடாடுவதை உணர்ந்து வணங்காமலிருகக முடியாது” என்று சார்புக் கொள்கை கணட ஐனஸ்டின் கூறினா.

"பார்க்கப பலவித மாயும்-ஆகப்

பலலாயிரங் கோடி பண்டமதாயும்

காககும கிலேககு யிராயும-கினற

காண பூரண காதனைய போறறி'

இவ்வாறு மஸ்தான் சாகிபு அப்பா பாடுகிமுர்கள்.