பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

சி. நாராயணசாமி முதலியார் பதிப்பித்து வந்துள்ளார். சூன். 1874இல் ஏழாம் பதிப்பை வெளியிட்டு உள்ளார். அதன் பத்தாம் பதிப்பு 1875 டிசம்பரில் வெளிவந்துள்ளது. இவ்வாறு ஒராணடுக் குள்ளேயே மூன்று நான்கு பதிப்புகள் வெளிவந்து மக்களிடையே நன்கு பரவியிருந்ததைக் காணகிருேம்.

இந்த நூற்ருண்டில் பலர் மஸ்தான் சாகிப திருப்பாடற் றிரட்டை வெளியிட்டுள்ளனர். திருக்குறளை எவ்வாறு ஒவ்வொரு பதிப்பகத்தாரும் தாங்கள் ஒரு பதிப்பு கொண்டு வரவேண்டு மென்ற கருதினர்களோ அவ்வாறு மஸ்தான் சாகிப் பாடல்களே யும் அச்சிட்டனர்.

காலத்துக்கேற்ற வகையில் செம்மைப்படுத்தும் பணியைக் கோட்டாறு கா. ப. ஷெய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் ஏறறுக்கொண்டு மஸ்தான பாடல்களை ஆய்ந்துள்ளனர். அப்பணி பில் வேறு சிலரையும் ஈடுபடுத்தியதால் பின்வந்த பதிப்புகள் அனைத்தும் கோட்டாறு கா. ப. ஷெய்குத்தம்பிப் பாவலர் அவர்கள் முன்னிலையில் பரிசோதித்த பிரதிக்கிணங்க அச்சிட்ட தாகக் குறிப்பிடுகின்றனர்.

அட்டாவதானி செய்குத்தம்பிப் பாவலர் அ வ ர் க ள் முன்னிலையில் பரிசோதித்ததை முதன முதல வெளியிட்டவர்கள் அமரம்பேடு இரங்கசாமி முதலியார் அண்டு சனஸ் அவர்கள் 1921இல் தமது பூமகள் விலாச அச்சுக்கூடத்தில் அதனைப் பதிப் பித்துளளனர். 1923இல் மேற் குறிப்பிட்ட பிரதிக்கிணங்க கே.வி, துரைசாமி முதலியாரவர்கள் பூரீ சுப்பிரமணிய விலாசம் பிரஸ்ஸில் திருப்பாடற்றிரட்டை வெளியிட்டுள்ளனர்.

சென்னை மண்ணடி சரணபவ அச்சுக்கூடம் 1930இல் திருப் பாடற்றிரட்டை அச்சிட்டுள்ளன. பாமர மக்களுக்குப் பயன படக்கூடிய நூல்களைப் பெருவாரியாக அச்சிட்டு வரும் பி. இரத்தின நாயகர் & சன்ஸ் நிறுவனம் தொடர்ந்து இதுகாறும் திருப்பாடற்றிரட்டை அச்சிட்டு வருகின்றது.

குணங்குடியாரின் பாடல்களை மட்டும், பயின்று வநத மக்களுக்கு அவற்றின் பொருளையும் உரைவடிவில் தர வேண்டு மென்ற எண்ணம் இந்த நூற்ருணடின தொடககததில் எழுநதது. அதைப் பதிப்பாளர்கள் நூலின தொடக்கததில் குறிப்பிட்டுள் ஒாார்கள்,