பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

இதற்கு முந்திய பதிப்பான முதல் பதிப்பை வெளியிட்டவர் செய்யிது தாஹா ஆலிம் சாகிபு ஆவார். ஞானியார் பாடல் களின் பல பிரதிகளை ஆய்ந்து, வழுக்களைக் களைந்து, பிரதிபேதங் களை நட்சத்திரக் குறியிட்டும் செம்மைப்படுத்திப் பதிப்பித்தவர் கொட்டாம்பட்டி எம் கருப்பையாப் பாவலர். இரண்டாயிரம் பாடல்களுக்கு மேற்பட்ட ஞானச் செல்வத்தை அழகுற அச்சிட் டுள்ளனர்.

ஞான காரணம், ஞான தோத்திரம், ஞானப் பஃருெடை, ஞான அம்மானை, ஞானத் திருப்புகழ், ஞானப்பிள்ளைத் தமிழ் . ஞானக்கும்மி போன்ற பல பிரிவுகள் நூலில் உள்ளன. மொத்தத்,

தில் அரிய ஞானச் செல்வம் இதுவாகும்.

நெல்லை மாவட்டத்தில் கி. பி. 1854இல் தோன்றியவர் காலங்குடி மச்சரேகைச் சித்தர். அவர்தம் முழுப் பெயர் சையிது அப்துல் வாஹிது ஆலிம் மெளலான ஐதருஸ் புலவர் என்பதாம். தமிழ், அரபு ஆகிய இரு மொழிகளிலும் வல்லவரான அவர் முப்பதாவது வயதில் மெய்யுணர்வு பெற்றுச் சித்தராஞர்: நூருண்டுகட்கு மேல் வாழ்ந்தவர். கி. பி. 1951இல் மறை வுற்ருர். அவர்தம் மெய்ஞ்ஞானப் பாடல்கள் மச்சரேகை சித்தன் திருப்பாடல்’ என்ற நூலில் தொகுத்து 1928இல் அசசி டப் பெற்றுள்ளன.

இந்நூலில் காருண்ய சதகம், மோr சதகம், காரண சதகம், மெய்ஞ்ஞான சதகம், பூரண சதகம், பேரின்ப சதகம், நாதாந்த சதகம், சிதானந்த சதகம், ஏதார்த்த சதகம், வேதாந்த சதகம் முதலிய சதகங்களும் வாரீர் கண்ணி, தண்ணருட் கண்ணி, உபதேசக் கண்ணி முதலிய கணணிகளும் நூலில் இடம் பெற்றுள் ளன. ஒவ்வொரு சதகத்திலும் பத்துப் பதிகங்கள் அடங்கியுள் ளன. ஒவ்வொரு பதிகத்திற்கும் தனித் தலைப்பு கொடுக்கப் பெற் றுள்ளது. பாடல்கள் சீர்பிரிக்கப் பெற்று அழகிய முறையில் அச்சிடப் பெற்றுள்ளன. பாடல்கள் சுவையானவை. சித்தர் தன்னைத் தானே தரிசித்த விதத்தை சொல்கிரு.ர்.

'மணமன்றிக் கோயிலில்லை மாயையன்றிப் பூசையில்லை நினைவன்றிச் சகமுமில்லை நிராசைபிற்பா ராசையில்லை வினையன்றித் தோற்றமில்லை விசாரணையில் விகாரமில்லை தனையன்றி பெர்னறுமில்லை தனத்தானே தரிசித்தாம்’

பாடல்கள் அனைத்திலும் ஞானவெள்ளம் கரைபுரண்டு ஒடுகிறது. : |