பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 0

ஞானரத்தினசாகர மதாறிய்யா என்ற நூல் பலருடைய ஞர்னப் பாடல்களின் தொகுப்பாகும். மேலப்பாளையம் மெய்ஞ் ஞான குஞ்ஞாலி செய்கு முகியீத்தின் சாகிபு, அவர்தம் பேரன் ஆலிம் சாகிபு, அவர்தம் கலிபாவாகிய காடை செய்குமுகம்மது அபூபக்கர் லெப்பை ஆகிய இவர்களோடின்னும் பெரியோர்கள் பாடல்களும் இதில் அடங்கியிருக்கினறன. இதனைத் தொகுத்து முதலில் அச்சிட்டவர் காடை லெப்பை கலீபா ஆவார். அவரிட மிருந்து உரிமை பெற்று 1923இல இரண்டாம் பதிப்பை அச்சிட் டது சென்னை ஷாஹுல் ஹமீதிய்யா அச்சியந்திர சாலையாகும்.

இந்நூலில் மவுஜூது மாலை, இனனிசை, பலவகை மூன ஜாத்துகள், கும்மிப்பாடடு, ஆனந்தக் களிப்பு போன்ற பலவகைப் பாக்கள் இடம்பெற்றுள்ளன.

'நெல்லை யள்ளுஞ் சிறு பெண்ணுளே

நெல்லைக் குத்துஞ்செல்வக் கணணுளே

அலலாகூ கென்ற வருளை யனுதினம்

அகத்தினிற் குத்தெடி மின்ளுளே’

என்று ஞானப் பாடல்களுடன் பெண்கள் நெல்குத்தும் பாங்கில் அமைந்துள்ள 'நெல் குத்தும் பாட்டு’ படிக்கச் சுவையானது.

நாகூா மெளலா சாகிபு எனனும் ஷா முகம் மது கெளது சாகிபு அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய நூல் மெய்ஞ்ஞானத் தெளிவு, பல்வேறு ஞானப் பெருமக்கள் பைராகி மொழியில் பாடிய பாடல்களைச செந்தமிழ்ச செய்யுள்களால் இஞ்ஞானியார் ஆக்கியுள்ளார். 200-க்கு மேற்பட்ட பாடல்களைக் கொண்ட இச்சிறு நூல் 1926இல் விஜயபுரம் கருணநிதி அசசியந்திர சாலை யில் பதிப்பிக்கப்பெற்றது.

இந்நூல்கள தவிர வேறு ஞானப்பாடல் நூல்களும் அச்சாகியுள்ளன. 1875முதல் 1925வரையுள்ள இடைப்பட்ட ஐம்பதாண்டுக் காலத்தில் பல ஞானப் பெருமக்களின் பாடல்கள் நூல்வடிவில் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. இநநூல்கள் இப்போது கிடைப்பதற்கரிதாயுள்ளன. இத்தகைய அரிய நூல்களின பெயர்கள் கீழே தரப்பெற்றுள்ளன. இவை மீணடும் மீண்டும்