பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

தமிழகத்தின் தலைநகரில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தை யும் தமிழ்ப் புலவர்களையும் அனைத்துலக மக்களுக்கும் அறிமுகம் செய்துவைத்து, தமிழ் வளர்ச்சிக்காக முஸ்லீம்கள் செய்த சேனை எத்தகைய பாராட்டுதலுக்குரியவை என்பதை சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், ஆய்வுத் தொகுப்புகள் ஆகியவைகள் மூலம்அருந் தொண்டாற்றி வரும் அன்பும் பண்பும் கொண்ட அருமைச் சகோதரர் மணவை முஸ்தபாM.A.அவர்களே தமிழ் வளர்ச்சியில் ஆர்வங் கொண்ட அனைவருமே நன்கு அறிவர். சிந்தைக்கினிய சீரு போன்ற அரிய நூல்களே அதற்குச் சான்று.

இஸ்லாமிய மெய்ஞ்ஞானிக்கா சூஃபிகள்,ஞானவான்கள், ஞான மேதைகள் என்ற பெயரால் முஸ்லீம்கள் அழைப்பர். இத்தகைய மேதைகள் வாழ்ந்த காலத்து நிகழ்நத ஆச்சரிய நிகழ்ச்சிகளுடன் அவர்கள் தனி நிலையிலும் பரவச நிலையிலும் வசனமாகவும் கவி களாகவும் அருள் புரிந்த தத்துவங்கள் நிறைந்த கருத்துக்களையும் அனைவரும் மதித்துப் போற்றுவது மனிதனின் மேன்மைக்கு-நல் வாழ்வுக்கு வழிகளாக அமைந்திருக்கின்றன. அப்பெரியார்கள், புனித குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அறிவுரை களையும் நாயகத் தோழர்களான ஸஹாபாப் பெருமக்களின் கருத் தோவியங்களையும் அடிப்படையாகக்கொண்டே தங்கள் தத்துவங் களே-உள்ளத்தின் உணர்வுகளே எழுத்தில் உருவாக்கி வழங்கி புள்ளனர். இப்பெரியார்களின் சில கருத்துக்கள், சில பதங்கள். நமது பார்வைக்குப் புரியாத புதிர்களாகவும் மாற்றமானதாகவும் தோன்றினல், அகமியங்களை அறியும் ஆற்றல் படைத்தவர்களே அணுகி அறிந்து கொள்ளவேண்டுமே தவிர நமது அறிவைமட்டும் வைத்துக்கொண்டு முடிவு கட்டிவிட முடியரது. அவ்வுத்தமர் களின் பதங்களுக்கு நம் விருப்பம்போல் பொருளே வலிந்துரை செய்து, உயர் தத்துவங்களே கண்டனங்களுக்கும் குழப்பங் களுக்கும் இலக்காக்கிவிடக் கூடாது.

சூஃபியாக்கள் என்ற ஞானவான்கள் இருதயகத்தி அடைத் தவர்கள்; இறைஞானம் மிக்கவர்கள்: அல்லாஹ்வின் பிரகா சத்தில் வாழ்பவர்கள். அவர்களை நமது ஊனக்கண் கொண்டு குறைத்து மதிப்பிடக் கூடாது. புரியாத பதங்களே, புரியவில்லை: