பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.

அவன்மாட்டு உன்னை வாழும்படி செய்தலே' என்று கூறி விடலாம்.

ஆத்ம ஞானம் மனிதனைப் போன்று அவ்வளவு பழமையானது. உலகத்தில தோன்றிய ஒவ்வொரு பெருஞ்சமயமும் அகம்-புறம் ஆன்மம்-சரீரம், இறைஞானம்-அதன் அனுஷ்டானங்கள், சடங்குகள் என இரு பகுதிகளைக் கொண்டது. அகப்பகுதி மேலைய நாடுகளில் இறைஞானம் (theosophy) எனறும் கீழைய நாடுகளில் வட்மொழியில் பிரம வித்யா' என்றும் அழைக்கப் பட்டது மனித ஆன்மாவை இறைவனேடுத் தாகை ஒன்ற (Personal union) வகை செய்யும், நிரந்தரமான மாறுதலடை யாதத் தனிச் சிறப்பிறகுரிய நேர்த்தி-முறைமை (Phenomenon) (Mysticism) ஆத்ம ஞானம் என்று ஏ. ஜே ஆர்பெர்ரி கூறுகிரு.ர். எசசமயத்தவரது அல்லது நாடடவரது ஏகபோக உரிமையன்று அது வேறுபட்டச் சமுதாய நெறிமுறைகளைப் பினபற்றி வாழ்ந்துவந்த ஆத்ம ஞானிகள் அதை ஆர்வத்தோடு வளர்த்து வந்தனர். பிற சமயங்களைப் போன்று இஸ்லாத்திலும் ஆத்ம ஞானத்தை வளர்த்து இறைவனை அடைவதற்கு ஒரு அமைப்பு உருவாயிற்று. அது தலவ்வுஃப்’ என்று வழங்கலாயிற்று.

உண்மை இவ்வாறிருக்க, அறிஞர்களிடையே தலவ்வுஃப் நியோ பிளட்டானிஸத்திலிருந்து பிறந்ததென்றும், ஆரிய நாகரிகத் தொடர்பால் ஆரம்பமாயிற்று என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. அவை சரியன்று. பிற மதங்கள் பிற தத்துவ யியல்கள் இவற்றின் கலப்பாலன்றி தன்னியல்பாகவே தஸ்வ் வுஃப்’ தோன்றிற்று என்று கூறுவதே பொருத்தமாகும்.

திருக்குர்ஆனின் பேருரைகள் சூஃபித்துவத்திற்குரிய அடிப் படைக் கருத்துக்களைத் தன்னகததே கொண்டு மிளிர்வதைக் காணலாம். அணணல் நபி (ஸல்) அவர்கள் அமுத வாக்கு களிலும், அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகளிலும்

சூஃபித்துவத்தின் சாயலைக் காணலாம்.

“ஆதியும் அவனே : அந்தமும் அவனே, தோற்றுவதும் அவனே மறைந்திருப்பவனும் அவனே, அவன் சகலத்தையும் கன்கறிந்தவன்.”

o f (திருக்குர்ஆன் 57 : 3) "அல்லாஹ் மண, விண் இவ்விரண்டில் ஒளியாய் இருக்கிருன்.'

(திருக்குர்ஆன் 24 : 35)