பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

யோக நிஷ்டைகளையும் நுழைத்தார். இவ்வாறு எகிப்து நாட்டி லுள்ள சூஃபித்துவத்திற்கு ஒரு தனித் தன்மை ஏற்பட்டது.

இதேபோன்று பாரசீக மக்கள் இஸ்லாத்தைத் தழுவிய போது தங்களின பழைய மாகி முறை ஆத்மஞானத்தை (Magi system of mysticism) ஒப்புநோக்கினர். இவர்களில் பாயpது பிஸ்தாமி’ என்ற ஆத்மஞானி குறிப்பிடத் தக்கவர். இறைவனே மகிழ்விப்பதற்குரிய ஒரே வழி ஆத்மார்ப்பணம’ என்றும் அதன் வழி இறைவனோடு ஒனறிவிட்ட பின்னர் மனிதன் இல்லாமலாகி விடுகிருன் எனறும் கூறப்பட்டது. சூஃபிகளின் இத்தகையப் போக்கு ஷரீஅததிற்கும் சூஃபித்துவத்திற்கும் ஊடே இடைவெளி யைத தோற்றுவிபபதாய் அமைந்துள்ளது எனறு வைதீக முஸ்லிம் அறிஞாகள் (உலமாக்கள்) எணணத் தொடங்கினர். உலமாக்கள சூஃபிகளை வழிதவறியவர்கள் (heretics) என்று வெறுக்கலாயினர்.

மன்ஸுர் ஹல்லாஜ (கி பி. 858-922) என்பார் ஒரு பெரிய சூஃபி அவர் இந்தியாவுக்கு வந்தாரென்றும், இநதியத் தத்துவ யியல், யோகம் இவறறைப்பற்றி அறிந்து கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது. அவா ஒரு கல்லைப் போட்டார். 'நானே alsioramid - goam spouss (I am the Truth - God: Aham Brahma Asm: Anal Haq) என்று அவா கூறினர். இதன் பொருள் அவர் இறைவளுேடு ஒன்ருகி விட்டார்’ என்பது. உலமாக்களின் சீற்றத் திற்கு அவர் இலக்கானர். கொல்லப்பட்டார்.

கார்முகிலுக்கிடையே மின்னெளிக் கீற்று பளிச்சிடாமல் இல்லை. ஜூனைத் பக்தாதி (ரஹ்) போன்ருேர் தோனறி ஷரீஅத்தின் முதன்மையை நிறுவியும, இறைவனின் உண்மை நிலை (பசா)வை வலியுறுததியும சுமுக நிலை உருவாக வழிகோலினர். ஜூனத் பக்தாதி (ரஹ்) அவாகள சூஃபி என பாருக்கு வகுத்த இலக்கணம:

'சூஃபி தான்’ என்பதில் அழிந்து இறைவன் அளவில் நிலை யாகி இருபடாா” அதாவது சூஃபி தம உளளமையின் நிலையற்ற தன்மையை உணர்நது, அப்போலி நிலைபாட்டை ஒழித்து, இறை வனின ஸ்திரமான உள்ளமையால் நிலைபடுகிரு.ர். சூஃபியின் வாழ்வின் நோககமும் இலட்சியமும அல்லாஹவேதான், அல்லாஹவுடனேயே நேசம் கொளகிரு.ர். அவனுடைய நேசததிற காகவே எதையும செய்கிரு.ர். அல்லாஹவின் நினைவில திளேக்கும் போதெல்லாம் அவர் உள்ளம் தெளிவடையும். அல்லாஹ்வின ஞாபகமே அகததின் வாழ்வு. அவனை மறந்திருபபதே அதன்