பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

காலங்குடி மச்சரேகைச் சித்தர், ஐயம்பேட்டை அப்துல் கனி சாகிபு, காயல்பதி செய்யிது முகமமதுல காதிரி, கணியபுரம் ஷெய்க் அப்துல் காதிர், வாலே மஸ்தான் ஆகியோர் ஆவார்கள், இவர்கள் தம் பாடலகளில சூஃபி மெய்ஞஞானக் கருத்துக்கள் இடம் பெறுகின்றன. இஸ்லாமிய மெய்ஞ்ஞானக் கருத்துக்களைத தெரிவிககின்ற இவர்கள் அரபுச் சொற்களைப் பரவலாக விதைத துள்ளனர் தமிழ்நாட்டுப் பக்தி நெறியின் தாககத்தை இவர்கள் பாடல்களில் காணலாம், இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்கு இவர் களது பாடல்கள் பெருந்துணையாக நிற்கின்றன.

இந்தியாவின் சமுதாயப் பாரம்பரியம் பழமையானது. அது அழிந்து போய்விடவிலலை. தொடர்ந்து நடைபோட்டுக்கொண டிருக்கிறது. ஒருமைப்பாட்டுணர்ச்சியை வளர்த்து, இன்றைய கவலை நிறைந்த மனித குலத்திற்குச் சாந்தியை அளிக்கும் ஆற்றல் அதற்குண்டு என்பதில் ஐயமில்லை. உலக மாயையில வீழ்ந்து கிடக்கும் நாம் 'ஷரீஅத் என்ற கயிற்றைப் பற்றித். 'தரீக்கத’ எனற படிகள் மூலம ஹகீககத்’ என்ற ஒளியின் உதவியுடன் கரையேறி மஃரிபா எனற அகணடமான மண்டபத்தை அடைவோமாக. சத்தியம் சித்தியைத் தருவதாக சிததிவழி நித்தியானந்தம் கிட்டுவதாக !!