பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19

சூஃபிகளைப்பற்றி முதலில் எழுதப்பெற்ற நூலின் ஆசிரியர். SUF (wool) என்னும் சொல்லோடு தொடர்புபடுத்திக் கம்பளி ஆடையை அணியும பழக்கம கிருத்தவ மதத்தைச் சார்ந்த துறவி களிடம் இருந்ததாகவும் இதையே இஸ்லாமியச்சமயத்துறவிகளும் மேற்கொணடனர் என்று கூறுகின்றனர்."

இஸ்லாமிய நெறியில் சூஃபிகள் என்ற பிரிவு ஏற்பட்ட காலம் எது என உறுதியாகச் சொலவதற்கில்லை" என்ருலும் சமயமத ஆசார சங்கற்பவிகற்பங்களைக் கடந்தவன் 'இறை என்ற உணர் வும், அனபு வடிவானவன் என்னும் கருத்தும், உண்மை வாய்மை மெய்மை இவற்றின துணையால் அமையும் யோக நெறியால் ஆன்மீக உயர்வு பெறுதல் கூடும் என்ற எண்ணமும் தோன்றிய காலமே சூஃபிகளின் காலம். சித்தாகளின் தோற்றமும் அப்படித் தான் இருந்திருக்க வேண்டும்.

பதினெண்பேர்:- தமிழில் சித்தர்களைப் பொருத்த வரையில் "பதினெண் சித்தர்கள்’ என்று கூறும் மரபு இருந்து வருகிறது. பதினெண் சித்தர்கள் எனனும் வழக்கு காலத்தால் பிற்பட்டது என்ற கருத்தும் நிலவுகின்றது. உணமையில் மிகத்தொன்மை யான சித்தர் பாடல்களில் மிகப்பரவலாக அகச்சான்றுகள் கிடைக்கின்றன.

'சித்தர்கள்தான் பதினெண்பே ராத்தாள் சொன்ன செயலெல்லாங் கனடுனர்ந்து தெளிந்திட்டார்கள்?

-229 ஞான வெட்டியான் 1500

வகுத்தபொருளேதென்ருல் பதினெண்பேர்கள் வசனித்த நூருேறும் மறைத்தார் சித்தர்,

-4இராமதேவர் பரிபாஷை 48

வாதநூ லதீதம் பதினெண்பேர் சித்தர்

வசனிதத நூல்களும் பலிதம்’

-54 புலஸ்தியர் கற்பம் 300

"உன்னியதோர் வேதாந்தப் பெருநூல் எண்ணுறு உற்பணமாய் பதினெட்டுச் சித்தர் பாடல்’

-மச்சமுனி பெருநூல் 800

இப்படிப் பல மேற்கோள்களைக் காட்டலாம். பதினெட்டு பேர் எனும் மரபு உண்டு என்பது உண்மை எனினும் அவர்கள்