பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

வல்லிக்கண்ணன்


காரணங்களால் சென்னையை விட்டுச் செல்ல நேரிட்டதனால், ‘பிரக்ஞை' யிலிருந்து விலகிக் கொண்டார். ஜி. ரவீந்திரன் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

இந்திரா பார்த்தசாரதியின் 'குருதிப் புனல்' நாவலுக்கு அம்பை கடுமையான விமர்சனம் ஒன்றை எழுதினார். ரசமான பகுதிகள் கொண்ட அந்த விமர்சனம் ( ஒரு பரசுராமன் பிறந்த கதை : குருதிப் புனல்') 43-வது இதழில் வெளியாயிற்று.

அப்புறம், நாட்டு நடப்புகள், மாநிலங்களின் விவகாரங்கள், அரசியல், சமூகப் பிரச்னைகள் சம்பந்தமான கட்டுரைகளையே பிரக்ஞை வெளியிட முனைந்தது. அப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக, 44-45 (மே, ஜூன், ஜூலை-78 ), 47-49 ( ஆகஸ்ட், செப். அக். 78) என்று இரண்டு இதழ்கள் வந்தன. இவற்றுடன் 'பிரக்ஞை’ யின் இயக்கம் ஒடுங்கிவிட்டது என்றே தோன்றுகிறது. இதழ் எதுவும் வெளிவந்ததாகத் தெரியவில்லை.