பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

117



"கொல்லிப்பாவை மூலம் தமிழிலக்கிய உலகில் என்ன சாதிக்கப் போவதாக உத்தேசம்? அதைச் சாதிக்க, இதைச் சாதிக்க என்று எதையும் இப்போது சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் அதெல்லாம் 'கொல்லிப்பாவை' மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லையே. படைப்பாளிகள்-விமர்சகர்கள்- வாசகர்கள் தரும் ஆதரவைப் பொறுத்ததல்லவா? எனவே இப்போதைய என்னதைவிட 'கொல்லிப்பாவை'யின் வரும் இதழ்கள் தரும் பதில்தான் பொருத்தமாக இருக்கும். பொறுத்திருந்து பார்க்கலாம்.

கொல்லிப்பாவை எத்தனை இதழ்கள் வரும் என்று இப்போதே உறுதியாகச் சொல்ல முடியாதுதான். என்றாலும் வெளிவரும் வரையில்இனிமேலும்-எந்தக் காலதாமதமும் ஏற்படாது என்று உறுதி கூற முடியும். ‘கொல்லிப்பாவை' யின் வளர்ச்சியில் பங்கு கொள்வது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது-படைப்புக்கள் அனுப்பி உதவி செய்வது நன்கொடை வழங்குவது இரண்டிலும்”

ராஜமார்த்தாண்டனின் எதிர்பார்ப்புகள் சரிவரச் செயலில் நிகழவில்லை என்பதைக் காலம் நிரூபித்தது.

ஒவ்வொரு இதழிலும் காலதாமதத்துக்காக அவர் வருத்தப்பட நேரிட்டது. படைப்பாளிகள் நல்ல கதைகள், கட்டுரைகளை அனுப்பி, பத்திரிகையின் வளத்துக்கும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் துணை புரியவில்லை. தற்சிறப்பு மோகமும் சுயவிளம்பரப் பிரியமும், பிறரைப் பழிப்பது-பரிகசிப்பது-மட்டம் தட்டுவது முதலியவற்றில் தீவிர அக்கறையும் கொண்டவர்களின் ஆக்கிரமிப்பைக் ‘கொல்லிப்பாவை'யும் தவிர்க்க இயலாது போயிற்று.

‘கொல்லிப்பாவை', பெரிய அளவில், அதிகமான பக்கங்கள் கொண்ட ‘காலாண்டு ஏடு' ஆக வந்தது.

முதல் இதழ் 52 பக்கங்கள். அட்டை தனி சுந்தர ராமசாமியின் கதை 'அலைகள்' (6 பக்), நகுலன் சோதனை ரீதியில் எழுதிய 'ஒரு நீண்ட கவிதை-மழை மரம், காற்று' (5 பக்), அதற்கு 'அவதாரிகை' என்ற 2 பக்க முன்னுரை. இந்த இதழ் வருவதற்குச் சொற்ப காலத்துக்கு முந்தி மரணமடைந்த படைப்பாளி கிருஷ்ணன்நம்பி, கி. ராஜநாராயணன் 'வேட்டி' தொகுதிக்கு, சாது சாஸ்திரி என்ற புனைபெயரில் எழுதி வைத்திருந்த விமர்சனக் கட்டுரை- 'கரிசல்க் காட்டில் ஒரு படைப் பாளி' (13 பக்), 'சாகித்திய அகாடமி பற்றி' சுந்தர ராமசாமி எழுதிய