பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22. வைகை


சிறு பத்திரிகைகளில், தரமான ஏடுகளில், 'வைகை'யும் முக்கிய இடம் பெறுகிறது.

வைகை மதுரையிலிருந்து வெளிவந்தது. அதன் முதல் இதழ் ஆகஸ்ட் 1977-ல் தோன்றியது. 1981- ல் வெளிவந்த 28-ம் இதழுக்குப் பிறகு வைகை வரவில்லை.

அதன் முதலாவது இதழில் பிரசுரமான அறிவிப்பு இது :

“வைகையின் நோக்கங்கள் பற்றி அதன் சாதனைகளை வைத்தே தீர்ப்புச் சொல்ல முடியுமென்பதால் இப்போதைக்கு மெளனமே எங்கள் பிரகடனம். ஆனாலும், இன்னொரு பத்திரிகைக்கான அவசியத்துக்கான காரணங்கள் எவையேனும் இருந்தால் அவற்றைச் சொல்லிவிடலா மல்லவா?

மொத்தத்தில் ஒரு தரச் சீரழிவுக்கு நாம் வாழுகிற காலம் சாட்சியாயிருக்கிறது. கலையிலும் இலக்கியத்திலும் தரமிருந்தாலே ஜீவிதத்திலும் தரமிருக்கும். இந்தத் தர நிர்ணயமின்மையைப் பற்றி பிரக்ஞையின்மையே நம் வாழ்க்கையின் குணம். தரம் பற்றிய பிரக்ஞையை உருவாக்குவதும், அதை உயிர்பெறச் செய்து பரவலாக்குவதும் நம் தனித் தன்மையைக் காத்து நம்மை மந்தைகளாக்காமல் காக்கும் என்ற நம்பிக்கையே வைகையின் தோற்றத்துக்கு ஆதாரமும் நியாயமும்.

'வைகை' ஒரு 'சுத்த இலக்கிய இதழ்' அல்ல. நவீன வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் பரிசீலித்து ஒரு தரமுள்ள வாழ்க்கைக்கான சூழலை உருவாக்குவதில் உடன்பாடான சக்திகளை ஒன்றுபடுத்துகிற சாதனமாகவும் விளங்கும்.

பொதுவாக நிலவுகிற நாகரிக நிலைகளைத் தீர்மானிப்பதில் நம் கல்வி ஏன் பங்கெடுத்துக் கொள்ளவில்லை; கொள்கைப் பற்றின்றி நம் கட்சி அரசியலில் எவ்வாறு அடிப்படை மனித மதிப்பீடுகள் கூடப் புறக்கணிக்கப்படுகின்ன; அளவிலும் அபாயத்திலும் வீங்கி வருகிற விளம்பரங்கள் போன்ற விஷயங்கள் விவாதிக்கப்படுகிற மேடையாக 'வைகை' விளங்கும். ஒவ்வொரு வருஷமும் நூற்றுக்கணக்கில்