பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

வல்லிக்கண்ணன்


வித்தியாசமான கதைகள், புதுமையான கவிதைகள் பற்றிய விமர்சனக் கட்டுரை ஆகியவற்றை 'இன்று' கொண்டிருந்தது.

1977 ல் திருச்சியில் ‘விஸ்வரூபம்' தோன்றியது.

சில கனவுகள் கலைந்துதான் விஸ்வரூபம் பிறந்திருக்கிறது. முழக்கிச் சொல்ல பிரகடனங்கள் ஏதும் இல்லை.

விஸ்வரூபத்திற்கு ஒரு பிரியமுண்டு. 'வாசகத் தரம் உயர தன்னாலி யன்றவற்றைச் செய்வதுதான் அது' என்று கூறியது.

இலக்கிய விஷயங்களோடு நவீன அரங்குக் கலையிலும் அது ஆர்வம் காட்டியது.

'கோகயம்' என்று ஒரு பத்திரிகை (தாமரை என்று அர்த்தம்). ஆசிரியர் : திருமால் இந்திரசிங், முதல் இதழ் 1975 ஆகஸ்டில் வந்தது. திருவனந்தபுரத்தில் பிரசுரம் பெற்றது.

அ. திருமால் இந்திரசிங், அ. ராஜமார்த்தாண்டன், அ. ராஜேந்திரன், ஆ. தசரதன் ஆகியோரின் கூட்டு முயற்சி (இவர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் ).

'கோகயம்'- எதுக்கு? என்று கேட்டு விளக்கமும் தந்தார்கள்:

'சில விஷயங்களை எழுதுவதற்கு, பிற பத்திரிகைகளின் துணையை நாடுவதைவிட எங்களுக்கென ஒரு பத்திரிகை இருந்தால் இன்னும் துணிவாக எழுதலாமே என்ற எண்ணத்தின் விளைவே இது இந்த அகடமிக் ஸைடிலிருந்து உருப்படியாக எதுவுமே இதுவரை வரவில்லை என்றொரு எண்ணம் படைப்பாளிகளிடம் இருக்கிறது. அதை மாற்ற முடியும் என்ற எண்ணத்தின் விளைவே இது'

துணிவான இலக்கிய பூர்வமான விமர்சனக் கட்டுரைகளையும், புதிய இலக்கிய முயற்சிகளையும் கோகயம் வரவேற்றது.

மௌனி-ஒரு திறனாய்வு : பிரசாரமும் கவிதையும்; கவிதையில் சப்தம்; சிறுகதைப் பொருள் என்ற தலைப்புகள் உள்ள கட்டுரைகளை